kavithaigal.in - டிசம்பர் மாத இதழ், ஒரு கடிதம்

                                                 


கவிதைகள் இதழின் டிசம்பர் மாத இதழில் வெளிவந்த கவிதைகள் குறித்து ஆசிரியர் குழுவுக்கு எழுதிய கடிதம்,

கடிதம் எழுதப்பட்ட நாள்: டிசம்பர் 15, 2021

அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு,

இந்த மாத இதழ் வாசித்தேன். அண்ணாச்சி கவிதைகளால் நிறைந்திருந்தது விருதை நோக்கிய அவருடைய பல்லக்குப் பயணத்துக்கு இன்னும் வலுவான தோள்கள் இணைந்ததற்கு சமம், நல்ல திட்டமிடல்.

கவிதைகள் தேர்வு நன்றாக அமைந்நிருந்தது. 'ஸ்தம்பிதம்' கவிதை நான் அண்ணாச்சியையே நோக்கிய ஒன்றாகவே எண்ணியிருந்தேன். ஜெயின் கட்டுரையை முன்மொழிந்து அவருடைய தந்தையின் பிம்பமாக கற்பனை செய்திருந்தது கூரிய பார்வை. 'ஒரு கை குறைகிறது' ஓரளவு நேரடியாகப் பொருள்படும் ஒன்றுதான், ஆனாலும் ஆழமான வாசிப்பை அளித்தது.

'பார்வை' கவிதையை முன்னரே வாசித்திருந்தேன், ஆனால் விஜய குமாரின் குறிப்பு இந்தக் கவிதையை என் மனதில் நிரந்தரமாக அறைந்துவிட்டது.

லட்சுமி மணிவண்ண், சாம்ராஜ் இருவரின் கவிதைக் குறிப்புகளும் ஆழம்.

குழுவுக்கு வாழ்த்துகள்.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்