என் கவிதைகள் - கவிதையொன்று
ஜூலை 30, 2022
பாசி படர்ந்த குளமொன்றின்
கரையில் அமர்ந்து
தன்னுடைய கவிதையை எழுதினான்
அநாதி கால மீன்களும்
மூதுரைக்கும் ஆமைகளும்
காலங்களில் மிதந்து பழுத்த
இலைகளும்
ஆழம் சுமக்கும் நீர்க்குமிழிகளும்
நிலைத்த வெண் தாமரைகளும்
நூற்றாண்டுகளாக கரையில் மீன் பிடிக்கும்
சில கவிஞர்களும்
அவனருகில் வந்து
கவிதை விசாரித்தார்கள் (தன)
கேட்கக்கூடாத கேள்வியொன்றை
அவர்(வை)களிடம் கேட்டான்
உறைந்த ஒரு புன்னகையை
அளித்துவிட்டு தன்பணியாற்றக் கிளம்பினார்கள் (ன)
மூர்க்கமாய் நிராகரிக்கப்பட்ட
ஆந்தக் கவிதை
விக்ரமாதித்யன் தோளின்
பூதமாய்க் கனத்தது
பழுப்பேறின
நாட்குறிப்பின் தாள்கள்.
Comments
Post a Comment