என் கவிதைகள் - மயக்கம்
ஜூலை 4, 2022
மேடைப்பாடகன் யாரும் பாடியிராத
பிரபஞ்சப் பாடலொன்றைப் பாடுகிறான்
லயத்தின் மயக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தன
மனிதத் தலைகள்,
திருவிழாக்கள் தற்காலிகமானவை
நாளையின் தனிமை
மின்னி மறையும் கண்களுடன்
நிராகரிப்பின் மடியில்
தலைகவிழ்ந்து கொஞ்சுவான்,
அவன் பாடிய பாடல்
நினைவின் புல்வெளிகளில்
தவழும் காற்றாய்
வருடிக் கரையும்.
Comments
Post a Comment