என் கவிதைகள் - அரிதாரம்
ஜூலை 4, 2022
அவள் வாசலில் தயக்கமாய்
நிற்கிறாள்
ஒப்பனை கலைந்த அவள் முகம்
முலைப்பால் சுவைத்து
சொக்கும் குழந்தை
ஒப்பனைகள் முகங்களை மறைப்பதில்லை
அவை கண்களை மறைக்கும் கள்ளங்கள்
அழகி நிர்வாணக் கண்களுடன்
ஒரு கணம் மோனா லிசாவாகிறாள்
காற்று அவள் முகத்தை
பறவையின் இறகாய்
வருடிச் செல்கிறது.
Comments
Post a Comment