Posts

Showing posts with the label சிறுகதை

காவு சிறுகதை, ஜி. எஸ். எஸ். வி. நவின் - ஒரு வாசிப்பு

Image
                                                                 எழுத்தாளர், நண்பர் ஜி. எஸ். எஸ். நவீன் எழுதிய காவு சிறுகதை கனலி இணைய இதழில் வெளிவந்துள்ளது. வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய சிறு குறிப்பு இது. அன்புள்ள நவின்,  கதை மிகவும் கவர்ந்தது, வாசிக்கையில் ஒருவித பதற்றம் தொடர்கிறது. உங்களுடைய கதைகளில் மிகவும் கூரிய நடை அமைந்தவற்றில் ஒன்று என்றும் தோன்றுகிறது, கதையின் களமும் சூழலும் முதல் சில பத்திகளில் மனதில் ஏறி அமர்ந்துகொள்கிறது.  இதை ஒரு இலக்கியப் பிரதியாக மாற்றுவது அந்த அப்பாவின் மனநிலைக்கான காரணத்தைக் கையாண்ட விதம் என்று எண்ணுகிறேன். மிகவும் பூடகமான அல்லது மிகவும் நுண்ணிய ஒரு காரணம் அது. இந்தக் காரணத்தை காமத்துக்கான அல்லது எதன் மீதும் கொண்ட மிகைப் பற்றுக்கான உருவகமாக வாசிக்க நிறைய இடம் இருக்கிறது, நான் அப்படித்தான் வாசித்தேன்.  சீதையைக் கண்ட இராவணனுக்கும், எப்போதும் தொழில...

நீலத்தழல் சிறுகதை, அரூ இதழ் - ஒரு வாசிப்பு

Image
                                                            நண்பர் ஜெகதீஷ் குமாருடைய ' நீலத்தழல் ' என்ற சிறுகதை அரூ இதழில் வெளியாகியுள்ளது ('நீலத்தழல்' அழகிய கவித்துவமான தலைப்பு). அரூ அறிவியல் புனைவுகளை வெளியிடும் ஒரு இதழ். அதில் ஒரு சிறுகதைப்போட்டியில் தேர்வாகி இந்தக் கதை வெளியிடப்பட்டுள்ளது. சிறுகதை குறித்த என்னுடைய பார்வையை ஒட்டியே இந்தப் பதிவு. 'bioluminescence' எனும் கடலில் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வான 'ஒளி உமிழ்வு' மற்றும் அதன் அழகை முன்வைத்து, பிரசாத் எனும் புலம்பெயர் ஆசிரியனின் உளச்சலனங்களைச் சிறுகதை காட்சிப்படுத்துகிறது. கதையினூடாக சில அடிப்படைகளை வாசகனாக விரித்துக்கொள்ள முடிந்தது. தீவொன்றில் வாழும் மக்களின் மனநிலைகள் நிலப்பரப்பில் வாழும் மக்களிலிருந்து விலகியிருக்கும். கடல் என்பது அங்கு புலம்பெயரும் ஒருவனுக்கு அச்சமூட்டக்கூடிய சலிப்பான ஒரு இயற்கைக் காட்சி (பிரசாத்) அல்லது கண்டுகளிக்கக்கூடிய ஒரு சாகசம்...

'ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்', சிறுகதை - வாசிப்பு

Image
                                                         எழுத்தாளர் ஆதவனின் படைப்புகளை நான் இதுவரை வாசித்ததில்லை. நண்பர்களுடனான மதாந்திர இலக்கியக் கூடுகைகளில் ஒரு சிறுகதை குறித்த வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். அதற்காக ஆதவனின் ' ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும் ' என்ற சிறுகதையை நண்பர் மதன் முன்வைத்தார். சிறுகதை குறித்த எண்ணங்களைத் தொகுத்துக்கொள்வதற்காக இந்தப் பதிவு. வாழ்வின் முதிர் வயதுப் பருவத்தில் இருக்கும் ஒரு மனிதர் தன்னுடைய அன்றாட அனுபவங்களைக் கூர்மையாக விவரித்துச் சொல்வதில் இந்தக் கதை விரிகிறது. நாகராஜன் டெல்லியில் வாழும் ஒரு தமிழர். மனைவியை இழந்து தன்னுடைய மகனின் வீட்டில் மருமகள் பேத்தி ஆகியோருடன் வாழ்கிறார். மனைவியின் இழப்பை முழுதாக உணர்கிறார். மகன் மற்றும் மருமகளின் மேல் மோசமான அபிப்பிராயங்களையே கொண்டிருக்கிறார். அவர் அன்றாடம் தெருவில் இறங்குகையிலும் ஒரு பஞ்சாபி இளைஞன் தன்னுடைய ம...

சிவமயம் சிறுகதை, ஜெயமோகன் - ஒரு பார்வை

Image
                                            ' சிவமயம் ' எழுத்தாளர் ஜெயமோகனின் தொடக்ககாலச் சிறுகதைகளில் ஒன்று, 1992ல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்களுடனான மாதாந்திர இலக்கியக் கூடுகையில் சிறுகதையொன்றை விவாதிக்க முடிவு செய்தோம். அதற்கு நண்பர் ஜெகதீஷ் குமார் இந்தக் கதையைப் பரிந்துரைத்தார். சிறுகதையை வாசித்துவிட்டு அதன் மீதான என் எண்ணங்களைத் தொகுத்துக்கொள்ள இந்தப் பதிவை எழுதுகிறேன். சுகவனேஸ்வரர் என்றழைக்கப்படும் சிவனின் ஒரு வடிவம் குடிகொண்டிருக்கும் கோவிலொன்றில் நிகழும் கதையை ஒற்றி ஆசிரியர் சிறுகதையை அமைத்திருக்கிறார். இந்தக் கோவில் சேலத்தில் இருப்பதாகவும், கோவிலை ஒட்டிய தொன்மக் கதையொன்றையும் இணையத் தகவல்கள் அறிவிக்கின்றன.  கதையில் சுகவனேஸ்வரர் குடிகொண்டிருக்கும் லிங்க வடிவச் சிவன் உள்ள கோவில் அதிகக் கவனிப்பற்று இருக்கிறது. சிவனுக்கான பூஜைகள் செய்யும் சம்பு குருக்கள், அங்கு வந்து தங்கி கோவிலைப் பிரசித்தி பெறவைத்த  '...

ஃப்ளமிங்கோ சிறுகதை, காளிப்ரஸாத் - வனம் இதழ்

Image
                                                                   எழுத்தாளர் காளிப்ரஸாத் வனம் இணைய இதழில் ஃப்ளமிங்கோ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். அவருடைய சில சிறுகதைகளை இணைய இதழ்களில் வாசித்திருக்கிறேன். தனக்கே உரிய ஒரு சொல்லல் முறையைக் கொண்டிருக்கிறார். ஒரு எழுத்தாளனின் சில கதைகளை வாசித்திருந்தாலும் வாசகனாக மனம் ஒரு பரிச்சய உணர்வை அடைகிறது, அவனுடைய அடுத்த படைப்புகளை வாசிக்கத் தூண்டுகிறது. இந்தத் தூண்டலே ஃப்ளமிங்கோ சிறுகதையை வாசிக்க வைத்தது. மெல்லிய பகடி கலந்த நடையில் எளிய சினிமாப் பாடல்களுக்குக் கூட உணர்ச்சிவசப்படும் கதாப்பாதிரம் ஒன்றின் பார்வையில் சிறுகதை விரிகிறது. ஃப்ளமிங்கோ பறவை பொதுவாக ஒரே ஒரு முட்டையை மட்டுமே ஈளும் வழக்கமுடையது. இந்தப் பறவையை காளிப்ரஸாத் ஒரு படிமமாகப் பயன்படுத்தியிருக்கிறார். சிறுகதையில் மிக அழுத்தமான சூழலிலும் நேர்மறையாக இயல்பாக வெளிப்படும் பெண்கள் சிலர் வருக...

வர்ணகலா, சிறுகதை - ஷோபாசக்தி, வல்லினம்

Image
                                                              எழுத்தாளர் ஷோபாசக்தி தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர் என்று அறியப்படுகிறார். சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவரும் அவரை தமிழ்ச் சிறுகதைகளில் உச்ச சாத்தியங்களை நிகழ்த்திய கலைஞர் என்றே எண்ணுகிறார்கள். அவருடைய சிறுகதைகள் சிலவற்றை இணையத்தில் வாசித்திருக்கிறேன், நாவல்களையோ மற்ற தொகுப்புகளையோ தொடர்ச்சியாக வாசித்ததில்லை. ஜனவரி மாத வல்லினம் இணைய இதழில் அவருடைய வர்ணகலா என்ற சிறுகதை வெளியாகியுள்ளது. இலங்கையின் அரசியல் சூழலால் புலம்பெயர்ந்து வாழும் தமிழினம் இன்று இரு பத்துவருடங்களைக் கடந்திருக்கிறார்கள். தாம் அடைந்த அயல் இடங்களில் ஆழமாக வேறூன்றியுமிருக்கிறார்கள். கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, பிரிட்டன் என்று படர்ந்து வாழ்கிறார்கள். தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவனாக, இலங்கைத் தமிழர்கள் குறித்து ஒற்றைப்படையான பிம்பங்களையே இதுவரை அடைந்திருக்க...

பேராசிரியரின் கிளி, சிறுகதை - சொல்வனம்

Image
                                                              சொல்வனம் இணைய இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் ' பேராசிரியரின் கிளி ' எனும் கதை வெளிவந்துள்ளது. அவருக்கு கடிதமாக எழுதிய பகுதி இங்கு, அன்புள்ள ஜெகதீஷ், சிறுகதையை வாசித்துவிட்டேன், பிடித்திருந்தது. வியத்தகு திறன்கொண்ட ஒரு பேராசிரியருக்கும் மாணவிக்குமான உறவில், அவர்களுக்கிடையே நிகழும் கூரிய உணர்வுப் பாய்ச்சல்களைக் கதை அலசியிருக்கிறது. ஸ்ருதி சாதனை உணர்வுகொண்ட ஒரு பெண்ணாக கதையை ஒட்டுமொத்தமாகத் தாங்கியிருக்கிறாள். அவளுடைய இயல்பு முதல் பத்தியிலேயே சொல்லப்படுகிறது. அவளுடைய கதாப்பாத்திரத்தை வாசகனாக என்னால் நன்றாக விரித்துக்கொள்ள முடிந்தது - இப்படிச் சொல்லலாம், மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. பேராசிரியருக்கும் ஸ்ருதிக்குமான கடந்தகால உறவின் ஒரு நிகழ்வு, அதுதரும் புழுக்கம் கதையில் அது வெளிப்படும்வரை நன்றாகக் கூடிக்கொண்டே இருந்தது.  இத்தனை சாதனை நிகழ்த...

சித்திரச் சபை சிறுகதை, தமிழினி - ஒரு வாசிப்பு

Image
                                                              சுரேஷ் பிரதீப் என்ற பெயரை முதலில் கண்டுகொண்டது ஜெயமோகனின் வளைத்தளத்தில் அவர் 'குற்றமும் தண்டனையும்' நாவலுக்கு எழுதிய மதிப்புரை வாயிலாகத்தான். அந்தக் கட்டுரை ஒரு நாவலை இதனை கூர்மையாக வாசிக்க முடியுமா எனும் வியப்பை அளித்தது. இணைய இதழ்களில் அவர் எழுதும் விரிவான விமர்சனக் கட்டுரைகளால் பெரிதும் கவரப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் சியமந்தகம் இதழில் ஜெயமோகனின் சிறுகதையுலகு குறித்து மிகச் சிறந்த மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார்.  தமிழினி இதழில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பின் ' சித்திரச் சபை ' சிறுகதையை வாசித்தேன். சிறுகதை வாசித்தவுடன் மனதில் ஆழ்ந்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. மகனிடம் அதிகாரம் செலுத்தும் தந்தை, தந்தையின் முன் சுயமைதுனம் செய்து மாட்டிக்கொள்ளும் மகன் குணசேகர், மனஓட்டங்களை விசித்திரமான ஓவியங்களாக வரையும் குணசேகரின் மனம் பிறழ்ந்த நண்பன் நசீர...

கல்லளை சிறுகதை, சொல்வனம் - ஒரு கடிதம்

Image
                                                              நண்பர் ஜெகதீஷ் குமார் எழுதிய கல்லளை சிறுகதை சொல்வனம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. சிறுகதையை குறித்து அவருக்கு எழுதிய கடிதம், அன்புள்ள ஜெகதீஷ், சிறுகதை முதல் வரியிலேயே துவங்கி, பரபரப்புடன் நகர்ந்து, கவித்துவமான, தத்துவார்த்தமான ஒரு முடிவுடன் நிறைகிறது. முதல் வாசிப்பில் தேர்ந்த எழுத்தாளனின் சிறுகதை ஒன்றை வாசிக்கும் உணர்வே ஏற்பட்டது. தடையில்லாத ஒழுக்கான நடை, அற்புதமான கதைசொல்லல் என முழுமையான ஒரு வாசிப்பனுபவத்தை அளித்த சிறுகதை. 'கல்லளை' எனும் தலைப்பு பொருத்தமாகவும், மிகுந்த அர்த்தத்துடனும் கதையைத் தாங்கி நிற்கிறது. இந்த தலைப்பே கதையை தனித்துவமான ஒன்றாக நிலைநிறுத்துகிறது, அவ்வளவு கூர்மை. அறிவின் பாதையைத் தேடுபவனான சித்தி குலத்தின் பஸ்தாவா, அதிகாரத்தின் ஆயுதத்தின் பாதையைத் நாடும் ஹொய்சால அரசின் வாரிசான ஹக்கா ராவ் என இரு கதைமாந்தர்களின் தேடலாகவே இந்த...

ஊசித்தட்டான்களும் ஆறாவது விரலும், வண்ணதாசன் - ஒரு வாசிப்பு

Image
                                          நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு வண்ணதாசனின் சிறுகதை ஒன்றை  கனலி இதழில் வாசித்தேன், மிகவும் கவர்ந்தது. வண்ணதாசனின் கதைகளுக்கே உரிய திருநெல்வேலி மண்ணைச் சார்ந்த நடுத்தரவர்கத்து கதைமாந்தர்கள். அவருடைய கதைகளில் எப்போதும் இடம்பெற்றுவிடும் பூக்கள் (வாடாமல்லிப் பூ, அரளிப் பூ) என நிறைந்த வசிப்பனுபவம் அளித்த சிறுகதை. அவர் கவிஞராக இருப்பதால் கதை முழுக்க சொல்லியும், சொல்லாமலும் விடப்பட்ட பூடக அம்சங்கள் கொண்ட கதையாகவும் உள்ளது. வாசகன் கதைக்குள் நுழைந்து அதன் நிகழ்வுகளை அவதானித்து தனக்கான கேள்விகளை எழுப்பிக்கொள்ள நிறைய இடைவெளி அளித்திருக்கிறார். சிறுகதையின் காட்சிகள் நுண்சித்தரிப்புகளாக இயல்பாக மனதில் அமர்கின்றன. வண்ணதாசன் ஒரு ஓவியர் என்பதையும் நினைவுகூரலாம். பிரேமாவும் சந்திரனும் பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு சிறிய தெருவில் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு சினேகா என்றொரு மகள் பிறக்கிறாள், மூளை வளர்ச்சி குறைந்த பெண், மூன்று வயதுக்குள் இருக்கலாம். சந்தி...

பிறப்பொக்கும் சிறுகதை, பதாகை - ஒரு கடிதம்

Image
                                                         பதாகை இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் சிறுகதை ' பிறப்பொக்கும் ' வெளியாகியுள்ளது. அதன் மூலப் பிரதியை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம். கடிதம் எழுதப்பட்ட நாள்: டிசம்பர் 31, 2021 அன்புள்ள ஜெகதீஷ் , கதையில் செந்தில் என்ற ஒரு சிறுவனை மையமாக வைத்து அவனைச் சுற்றி விரியும் சூழலைக் காட்டியிருக்கிறீர்கள். இந்தக் கதைக்குத் தேவையான துருத்தாத ஒழுக்கான எளிய நடையை அமைத்திருக்கிறீர்கள். கதையின் சூழல் 90 களின் தொடக்கத்தில் கோவையில் ஒரு சிறு நகர் சார்ந்த ஒன்று என்பது என் ஊகம் (இல்லை 80 பதுகளின் கடைசியா ?). லாட்டரி டிக்கெட் விற்பனை , நகைக்கடையில் நதியாவின் படம் , டொரினோ , டேப்ரெகார்டர் , இளையராஜா பாடல்கள் என அந்தச் சூழல் கதை முழுக்க அழகாக விரிந்துகிடக்கிறது.   சோமு உடல் ஊனமுற்ற , சுயமாக உழைக்கும் , தனக்கான துணை அமையாத விரக்தியில் வாழும் – அதற்கான முனைப்புகளில் இருக்கு...

கர்மா சிறுகதை, சொல்வனம் - ஒரு கடிதம்

Image
                                                              சொல்வனம் இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் ' கர்மா ' சிறுகதை பிரசுரமகியுள்ளது. கதையை அதன் மூலத்திலேயே வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம். கடிதம் எழுதப்பட்ட நாள்: அக்டோபர் 29, 2021 அன்புள்ள ஜெகதீஷ் , 'Karma' கதையை இரு முறை வாசித்தேன் . உங்களுக்கே உரித்தான சரளமான கதை சொல்லல் , கதாப்பாத்திரங்களின் கதையாடல் என ஒருங்கமைவான முறையில் அமைந்த கதை . கதை நான்கு குடும்பங்களின் வாழ்வை சொல்லி , அதன் விளைவான ஒரு முரண்பாடு எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என அலசுகிறது . கதை அடிப்படையில் மனித மனங்களின் கீழ்மையைச் சொல்கிறது . கடைசி நான்கு வரிகள் கதையைத் தாங்கி நிற்கிறது , உங்கள் கதைசொல்லும் திறமைக்கு சான்று . குடுக்கல் வாங்கல்களால் அமைந்துவிட்ட வாழ்வு இது , நீங்கள் யாரையும் புனிதப்படுத்தாமல் இருந்ததை ரசித்தேன் . அதற்க...