Posts

Showing posts with the label கடிதம்

யாசனை, சிறுகதை - இலக்கிய இரவு மிக்ஸிகன் குழுமம்

Image
வணக்கம் மது, உரையாடலைக் கேட்டேன். நண்பர்கள் ஜெய சக்தி, எஸ். கே., சங்கர் மூவரும் கதையை உணர்வுப்பூர்வமாக அணுகியது மிகவும் நிறைவை அளித்தது. பசி, தனிமை, முதுமை ஆகியவை மானுடப் பொதுவான வாழ்வின் ஒரு நிலை. அதையே எங்கள் ஊரில் நான் பார்த்து வளர்ந்த ஒருவரின் பிம்பத்தை வைத்து புனைவாக்கினேன். நீங்கள் கிழவரின் தடி குறித்து அவதானித்ததும் நிறைவை அளித்தது. மிக எளிய கதைக்கருவைத் தாங்கிக்கொண்டிருக்கும் கதை இது. கிழவரின் நிலையை எவ்வளவு கூர்மையாக காட்சிப்படுத்தமுடியுமோ அவ்வளவு முயன்றேன். ஆம், கிழவருடைய மனநிலை மாறுவது இயற்கையான மனிதப் பண்புதான் இல்லையா. உங்கள் கேள்விக்கே வருகிறேன். கிழவர் அந்தக் கோழிக்கு உணவிடும் தருணத்தில் கதையை முடித்திருக்கலாமா? நிச்சயம் சாத்தியமே. அது கதைக்கு வேறு ஒரு கோணத்தை அளித்திருக்கும். ஆனால், ஹிந்திக்காரக் குடும்பம் கதையில் உபரியாக நிற்கும் நிலை வரும். மேலும், எங்கோ யாரோ ஒருவர் இன்னொருவருடைய பசியை ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்ற எளிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவும் இந்த முடிவை நோக்கி, ஏன், இந்தக் கதையை நோக்கியும் என்னை நகர்த்தியது. இன்னொரு காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். எனக்கு ...

ஒரு கவிதையும், விவாதமும்

Image
                                                                           "தெருவிளக்குகளே ஏன் இத்தனை தலைகுனிவு சற்றே நிமிருங்கள், ஒளியைத்தானே பாய்ச்சுகிறீர்கள்?" சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026 அன்புள்ள பாலாஜி ராஜு அவர்களுக்கு, கிட்டுகிற படைப்புகள் எல்லாம் வாசிக்கப்படுகின்றன. சில முதல் சுற்றில் மறுக்கப்பட்டு விடும். சில இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் வரை சென்று தேர்வு/ மறுப்பைப் பெறுகின்றன. சொல்கிற அளவு கறாராக இந்த முறைமை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றா லும் பெரும்பாலும் இதுதான் முறைமை இங்கு.  அதனால் சுயமாகக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு, தரத்தை எட்டியது என்று மனம் உறுதி கொள்ளும் எதையும் இங்கு அனுப்பலாம், அதுதானே படைப்பு சுதந்திரம் என்பது?  நிற்க உங்கள் கவிதைகளை பதிப்புக் குழுவுக்கு அனுப்பி விட்டேன். முடிவு கிட்ட இன்னும் 10 தினங்களாவது ஆகும்....

ரம்யா மனோகரன் கவிதைகள் - ஒரு கடிதம்

Image
                                                            ரம்யா மனோகரன்: கவிதைகள் ரம்யா நலமா? முதலில் மன்னிப்பு கோருகிறேன். என்னிடம் வரும் படைப்புகளை முடிந்தளவு விரைவாக வாசித்து எண்ணங்களைப் பகிர்ந்துகொள்பவனாகவே இருந்திருக்கிறேன். உங்களுடைய கவிதைகளை வாசிக்க இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டது முதல் முறை, எனக்கே சற்று உறுத்துகிறது. முன்னரே குறிப்பிட்டது போல சில பயணங்கள், அலைச்சல்கள். அப்புறம் எப்போதும் போல மனம் கவிதைகளை விட்டு முற்றாக விலகியிருந்த நாட்கள். எவ்வளவு விலகி இருக்கிறேனோ அதே அளவு வாஞ்சையோடு மீண்டும் ஈடுபடுபவனாகவும் இருக்கிறேன். என்னுடைய மனநிலை அப்படி, வேறொன்றும் பிரத்யேக காரணங்கள் இல்லை. சரி, சுய பிலாக்கணம் போதும் உங்கள் கவிதைகளுக்கு வருவோம். எண்ணிக்கையில் நான் நிறைய கவிதைகளை எதிர்பார்த்தேன், பதிநான்கு கவிதைகள் மட்டும் சுட்டியில் இருந்தன. மிகுந்த பிரக்ஞையோடு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறீர்கள் என்று ...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் - ஒரு கடிதம்

Image
                                                                 வணக்கம் சதீஷ், கவிதைகளை வாசித்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தன. உங்களுடைய கவிதைகளின் மேல் எனக்கு எப்போதுமே தீராத ஈர்ப்பு உண்டு. உயிர்மை வெளியிட்ட உங்களுடைய முதல் தொகுப்பை வாசித்திருக்கிறேன், அதில் ஏனோ நீங்கள் முழுமையாக வெளிப்படவில்லை என்றுதான் தோன்றியது. அப்படித் தோன்றியதற்கு இன்னொரு காரணமும் உண்டு, ஜெயமோகன் தளத்தில் நீங்கள் அதற்கு பின் எழுதிய கவிதைகளை வாசித்திருந்தேன் என்பதுதான்.  கவிதைகளை இருண்மை, மகிழ்ச்சி என்றெல்லாம் வரையறுத்துக்கொண்டு வாசிப்பதில் எனக்கு ஆர்வமில்லை, அது கவிதை அளிக்கும் அனுபவத்தை குறுக்கிக்கொள்ளும் செயல் என்பது என் எண்ணம். கவிதை அதற்கே உரிய ஒரு மாயத்தை வாசகனுக்கு கடத்துகிறதா என்று மட்டுமே என் வாசிப்பில் தேடுகிறேன். உங்களுடைய பத்து கவிதைகளும் அதற்கே உரிய மாயத்தை நிகழ்த்துகின்றன. காலையில் எழுந்தவுடன் கவிதை...

மதார், ஒரு கவிதை பல பிரதிகள்

Image
                                                                      மதார், கவிதைகளை பலமுறை வாசித்துப் பார்த்தேன், வாய் விட்டுக்கூட வாசித்தேன். முதல் மற்றும் கடைசிப் பிரதிகளின் கடைசி வரிகள் ஒரு ஸ்டேட்மண்ட் என்ற தோற்றம் தருகின்றன அல்லது ஒரு முடிவை வாசகனுக்கு அறிவிப்பது போல இருக்கிறது. இரண்டாம் பிரதியின் கடைசி வரிகளும் நன்றாகவே உள்ளன, ஏனோ அதன் வார்த்தைகள் கவிதையோடு ஒட்டவில்லை என்று தோன்றியது. “அங்கிருந்தே விரிகிறது விடை கண்ணுக்கெட்டிய தொலைவு வரை” கவிதையின் ஒழுக்குக்கு தோதாய் (லயத்துக்கு) இருப்பது மூன்றாம் பிரதி என்று எனக்கு தோன்றுகிறது. அது கவிதையோடு நன்றாக ஒட்டிக்கொள்கிறது என்று எண்ணுகிறேன். “எதை எதோடு கூட்டச் சொல்கிறது தேவாலய உச்சி அந்தக் கூட்டல் குறிக்கு முன்னும் பின்னும் என்ன  வானம் + வானம் என அங்கிருந்தே  வானம் விரிகிறது விடை என” இதன் கடைசி நான்கு வரிகளை நான் இப்படி ...

முதல் கதை எழுதியவருக்கு மூன்று கதைகள் எழுதியவனின் கடிதம்

Image
                                                            நண்பருக்கு வணக்கம். முதல் கதை வந்துவிட்டது, வாழ்த்துக்கள். கதை நல்ல ஒழுக்குடன் செல்கிறது, அதற்குரிய ஒரு இயல்பான முடிவையும் அடைகிறது. ‘ஆயிரம் நீலப் பறவைகள்’ அழகிய தலைப்பு.   கதை குறித்து நான் இங்கு பகிரப்போவது கதைகள் எழுத எனக்கு நானே சொல்லிக்கொள்வது மற்றும் பிற நண்பர்கள் என் கதைகளை வாசித்துவிட்டு பகிர்ந்துகொண்டவை. நான் ஆங்கிலம் கலந்த உரையாடல்களை முடிந்தளவு தவிர்க்கவே முயல்வேன். அல்லது அதற்குரிய கதைகளையே எழுத எண்ணுகிறேன், தனிப்பட்ட தேர்வு இது அவ்வளவுதான். கதையின் நடை கதாப்பாத்திரங்களுக்குள் நிகழும் உரையாடல் மற்றும் அவ்வப்போது ஆசிரியரின் மூன்றாம் குரல் என்று நகர்கிறது. படித்த உயர் நடுத்தர வர்க்கம் என்பதால் அவர்களுக்குள் தெளிவான தமிழில் பேசிக்கொள்வது நடப்பதல்ல, ஆங்கிலம் கலந்த உரையாடல்கள் கதையின் போக்குக்கு இயல்பானதுதான். அதை என்னால் புரிந்துகொள்...

'மயிர்' இதழ் - அஜிதன் சிறுகதை

Image
                                                              'மயிர்' இணைய இதழில் அஜிதன் எழுதிய ' ஓர் இந்திய ஆன்மீக அனுபவம் ' எனும் தலைப்பில் எழுதிய சிறுகதையை ஒட்டி ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம், ஆசிரியருக்கு, ‘மயிர்’ இதழில் அஜிதனின் ‘ஓர் இந்திய ஆன்மீக அனுபவம்’ கதையை வாசித்தேன். மலம் குறித்த வர்ணனைகள் ‘விஷ்ணுபுரம்’ நாவலில் உள்ளது. ‘புறப்பாடு’ நூலின் ஒரு அத்தியாயத்தில் மும்பையின் சேரியில் உள்ள வீட்டின் சுவரில் மஞ்சளாக மலம் வழிந்து இறங்கிக்கொண்டிருக்கும், அருகில் தேவியின் படம் ஒன்றும் மாட்டப்பட்டிருக்கும். இன்னொரு அத்தியாயத்தில் வீட்டின் வயதான பெண் ஒருவர் ஆன்மீகம் குறித்து பேசுபவனின் ‘இலையில் கொஞ்சம் அள்ளி வைடா திங்கட்டும்’ என்று சொல்லும் தருணமும் நினைவுக்கு வருகிறது. ’ஏழாம் உலகம்’ நாவல் தொடும் உச்சத்தையும் எண்ணிப் பார்க்கலாம். இந்த கதையின் கதைசொல்லி அவன் செல்லும் இடத்தை அறிந்துவைத்திருக்கிறான். எல்லோரும் செல்...

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

Image
                                                            அன்புள்ள கார்த்திக், ஆகஸ்ட் 21ம் தேதி 'முடிந்தால் இன்று அழைக்கவும்' என்ற உன் குறுஞ்செய்தியை வழக்கமான ஒன்றாகவே எண்ணியிருந்தேன். நம்மிடையேயான உரையாடலை எப்போதும் நீயே துவக்குவாய். அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்ததால் பின்னர் அழைக்கிறேன் என்று பதில் எழுதினேன். 'நான் மிகவும் உடல் நலிந்திருக்கிறேன், உடனே அழைக்கவும்' என்ற அசாதாரணமான செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. 'தீவிரமான் மஞ்சள் காமாலை' என்ற உன் செய்தி என்னில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அது ஈரல் தொடர்பான ஒன்று என்பதை உணர்ந்து உடனே அழைத்தேன். அதிகம் பேசக்கூட இயலாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாய். இந்த நான்கு மாதங்களில் உன் உடல் மிகுந்த நலிவுற்றது, பனிரண்டு கிலோ எடை இழந்து எலும்புக்கூடாய் காணொலி அழைப்பில் உன்னை பார்த்த அதிர்ச்சி என்னில் இப்போதும் இருக்கிறது.  அவ்வப்போது உடல் தேறிவிட்டத...