யாசனை, சிறுகதை - இலக்கிய இரவு மிக்ஸிகன் குழுமம்
வணக்கம் மது, உரையாடலைக் கேட்டேன். நண்பர்கள் ஜெய சக்தி, எஸ். கே., சங்கர் மூவரும் கதையை உணர்வுப்பூர்வமாக அணுகியது மிகவும் நிறைவை அளித்தது. பசி, தனிமை, முதுமை ஆகியவை மானுடப் பொதுவான வாழ்வின் ஒரு நிலை. அதையே எங்கள் ஊரில் நான் பார்த்து வளர்ந்த ஒருவரின் பிம்பத்தை வைத்து புனைவாக்கினேன். நீங்கள் கிழவரின் தடி குறித்து அவதானித்ததும் நிறைவை அளித்தது. மிக எளிய கதைக்கருவைத் தாங்கிக்கொண்டிருக்கும் கதை இது. கிழவரின் நிலையை எவ்வளவு கூர்மையாக காட்சிப்படுத்தமுடியுமோ அவ்வளவு முயன்றேன். ஆம், கிழவருடைய மனநிலை மாறுவது இயற்கையான மனிதப் பண்புதான் இல்லையா. உங்கள் கேள்விக்கே வருகிறேன். கிழவர் அந்தக் கோழிக்கு உணவிடும் தருணத்தில் கதையை முடித்திருக்கலாமா? நிச்சயம் சாத்தியமே. அது கதைக்கு வேறு ஒரு கோணத்தை அளித்திருக்கும். ஆனால், ஹிந்திக்காரக் குடும்பம் கதையில் உபரியாக நிற்கும் நிலை வரும். மேலும், எங்கோ யாரோ ஒருவர் இன்னொருவருடைய பசியை ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்ற எளிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவும் இந்த முடிவை நோக்கி, ஏன், இந்தக் கதையை நோக்கியும் என்னை நகர்த்தியது. இன்னொரு காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். எனக்கு ...