நாவல் பயிற்சி வகுப்பு - ஜெயமோகன்
நாவலை அறிதல் – பாலாஜி ராஜு | எழுத்தாளர் ஜெயமோகன் ஆசிரியருக்கு, அமெரிக்காவில் மற்றுமொரு அழகிய இலையுதிர் காலம் உங்கள் வருகையால் அர்த்தத்துடன் கடந்திருக்கிறது. தத்துவ வகுப்புகள் முடிந்து கொலம்பஸ் திரும்பிய இரண்டு நாட்களிலேயே நாவல் பயிற்சி வகுப்புக்காக மீண்டும் மலைகளினூடாக ஏழுமணிநேர சாலைப் பயணம். இடம் - ஹெர்ன்டன், விர்ஜீனியா மாகாணம். கற்றல் மட்டுமே வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும் என்று நீங்கள் பலமுறை எழுதியிருக்கிறீர்கள், பேசியிருக்கிறீர்கள். இதை தத்துவம், நாவல் வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்களின் வாயிலாக தொகுத்துப் பார்க்கையில் இன்னும் ஆழமாக உணர்கிறேன். நாவல் பயிற்சி வகுப்பின் உச்ச அனுபவமாக என்னில் எஞ்சுவது, ‘The Master Christian’ நாவலின் தரிசனத்தை, தருணங்களை எங்கள் முன் பகிர்ந்த உங்களில் எழுந்த உணர்ச்சிகரமான உடல்மொழியும், மு...