Posts

Showing posts with the label Youtube

வானப்ரஸ்தம், சிறுகதை - சொல்வனம் உரை

Image
                                     நண்பர் ஜெகதீஷ் குமார் எழுதிய வானப்ரஸ்தம் சிறுகதை, திணமணி தீபாவளி மலரில் வெளியாகியிருந்தது. அது குறித்த உரையாடலை சொல்வனம் இதழ் ஒருங்கிணைத்தது. அதன் காணொளிப் பதிவை இங்கு இணைக்கிறேன். இது ஜெகதீஷ் குமாருடைய வலைத்தளத்தில் இருக்கும் 'வானப்ரஸ்தம்' சிறுகதைக்கான இணைப்பு, ஜெகதீஷ் குமார்: வானப்ரஸ்தம் - சிறுகதை

நீல வாகா, சிறுகதை - சொல்வனம் கலந்துரையாடல்

Image
நண்பர் மதன் எழுதிய நீல வாகா சிறுகதை குறித்து சொல்வனம் இதழில் நிகழ்ந்த இணைய கலந்துரையாடலின் இணைப்பு இது. ஒரு மணிநேரம் வரை உரையாடல் சென்றது. மதன் கேள்விகளுக்கு மிக விரிவான பதில்களை அளித்தார். இது இணையத்தில் காணொளி வாயிலாக நான் பேசும் மூன்றாவது உரை.

உறம்பரையான், சிறுகதை - ஒலிவடிவம்

Image
  அந்திமழை சிறுகதைப் போட்டியில் மூன்றாவதாகத் தேர்வுசெய்யப்பட்ட எனது சிறுகதை 'உறம்பரையான்' ஒலிவடிவில் பதிவேற்றம் கண்டுள்ளது. அதன் இணைப்பு இங்கு.

எழுத்தாளர் அறிமுகம் - சொல்வனம்

Image
                                                         என்னுடைய இரண்டு சிறுகதைகளை முன்வைத்து சொல்வனம் இதழ் வாயிலாக நடந்த கலந்துரையாடலின் ஒளிவடிவம் இது. நான் உட்பட இதில் பேசிய நண்பர்கள் அனைவருக்கும் காணொளி கலந்துரையாடல் புதியது என்பதால் அதற்கே உரிய பதற்றங்கள் நிறைந்த நாற்பது நிமிடங்கள் கொண்டது. கலந்துகொண்டது தவிர இந்த காணொளியை நான் இன்னொரு முறை பார்க்க முயலவில்லை, ஏனோ அதில் ஈர்ப்பில்லை. சொல்வனம் இதழுக்கும் பாஸ்டன் பாலாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இருபது ரூபாய் சிறுகதை - ஒலிவடிவம்

Image
                                          என்னுடைய 'இருபது ரூபாய்' சிறுகதையின் ஒலிவடிவம் சொல்வனம் யுடியூப் சேனலில் கேட்க கிடைக்கிறது. அதன் இணைப்பு இங்கே, சொல்வனம் | பாலாஜி ராஜு | இருபது ரூபாய் | சிறுகதை | Balaji Raju | Short Story | Irubathu_Rubai - YouTube

ஐஸ்கிரீம் சிறுகதை - ஒலிவடிவம்

Image
                                                         என்னுடைய 'ஐஸ்கிரீம்' சிறுகதையின் ஒலிவடிவம் சொல்வனம் யூடியூப் சேனலில் கேட்க கிடைக்கிறது. அதன் இணைப்பு இங்கு, சொல்வனம் | பாலாஜி ராஜு | ஐஸ்கிரீம் | சிறுகதை | Balaji Raju | Short Story |Ice Cream - YouTube

தேவதேவன் இணைய சந்திப்பு - எனது உரை

Image
                                                  அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 'கா.நா.சு. உரையாடல் அரங்கு' முன்னெடுப்பின் சார்பாக கவிஞர் தேவதேவனுடன் ஒரு இணைய சந்திப்பை நிகழ்த்தினார்கள். தேவதேவன் கவிதைகள் குறித்த ஒரு சிறு உரையை ஆற்றியிருந்தேன், அதன் காணொளிக்கான இணைப்பை இந்தக் குறிப்புடன் அளித்திருக்கிறேன். உரையாடலுக்கான முன்னேற்பாடாக ஒரு சிறு குறிப்பை எழுதி வைத்துக்கொண்டு அதைப் பலமுறை பேசி ஒத்திகையும் பார்த்திருந்தேன். ஒத்திகையில் ஏழு நிமிடங்களில் தொடங்கி பத்து நிடங்கள் வரை இந்த உரை அமைந்திருந்தது. பலமுறை பேசவேண்டியவற்றை மறக்கவும் செய்திருந்தேன், இன்னும் நன்றாக பயிற்சி செய்திருக்கலாமோ என்ற தவிப்பு தொடர்ச்சியாக இருந்தது. நான் பலர் முன் உரையாடுவதில் பழக்கமில்லாதவன், தவிர இயல்பான கூச்ச சுபாவியான எனக்கு இதில் சில சவால்கள் இருந்தன. முதலில் உரையை பேச்சு வழக்கில் அமைத்துக்கொள்ளலாமா அல்லது ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் நிகழ்த்துவதா என்ற குழப...