மிட்சிகன் உரை, கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன் ஆசிரியருக்கு, 2021ம் ஆண்டிலிருந்து விஷ்ணுபுரம் விருது விழா, குரு நித்யா காவிய முகாம், பூன் இலக்கிய முகாம் என தொடர்ச்சியாக வருடம் ஒருமுறையேனும் ஒரு பெரிய நிகழ்வின் பகுதியாக உங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வருட பூன் முகாமில் கலந்துகொள்ள இயலாத நிலை. அமெரிக்க வாழ்வுக்கே உரிய சில நடைமுறை காரணங்கள். மிக்ஷிகன் மாகாணம் உங்கள் பயணத் திட்டங்களில் இருந்தது ஒரு பெரும் ஆசுவாசத்தை அளித்தது. நண்பர்கள் சங்கர் நாராயணனிடமும் மதுநிகாவிடமும் பேசி ட்ராய் நகரில் நீங்கள் பங்கேற்கும் கூடுகைக்கு முன்பதிவுசெய்துகொண்டேன், கொலம்பஸ் நகரிலிருந்து வடதிசையில் மூன்றரை மணிநேர பயணம். நிகழ்வுக்கு ஒருமணிநேரம் முன்னரே அரங்கிற்கு சென்றுவிட்டேன் (Troy Community Center). சங்கர் நாராயணன் மெல்லிய பதற்றத்துடன் அலைந்துகொண்டிருந்தார். மிக்ஷிகன்...
அன்புள்ள கார்த்திக், ஆகஸ்ட் 21ம் தேதி 'முடிந்தால் இன்று அழைக்கவும்' என்ற உன் குறுஞ்செய்தியை வழக்கமான ஒன்றாகவே எண்ணியிருந்தேன். நம்மிடையேயான உரையாடலை எப்போதும் நீயே துவக்குவாய். அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்ததால் பின்னர் அழைக்கிறேன் என்று பதில் எழுதினேன். 'நான் மிகவும் உடல் நலிந்திருக்கிறேன், உடனே அழைக்கவும்' என்ற அசாதாரணமான செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. 'தீவிரமான் மஞ்சள் காமாலை' என்ற உன் செய்தி என்னில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அது ஈரல் தொடர்பான ஒன்று என்பதை உணர்ந்து உடனே அழைத்தேன். அதிகம் பேசக்கூட இயலாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாய். இந்த நான்கு மாதங்களில் உன் உடல் மிகுந்த நலிவுற்றது, பனிரண்டு கிலோ எடை இழந்து எலும்புக்கூடாய் காணொலி அழைப்பில் உன்னை பார்த்த அதிர்ச்சி என்னில் இப்போதும் இருக்கிறது. அவ்வப்போது உடல் தேறிவிட்டத...
நான் கொலம்பஸின் புறநகரமான டப்ளின் நகருக்கு (Dublin, Ohio) குடிபெயர்ந்தது 2021ம் ஆண்டு ஜூன் மாதம். 2014 ம் ஆண்டிலிருந்து வசித்த டொலிடோவை (Toledo, Ohio) ஒட்டிய பெரிஸ்பெர்க் நகரிலிருந்து (Perrysburg, Ohio) தெற்காக 120 மைல்கள் தொலைவில் அமைந்த நகரம் டப்ளின். டப்ளின் நகரில் நான்கு வருடங்களுக்கு மேலாக வசிக்கும் இந்த குடியிருப்புக்கு வந்து வீடுகளையும் நகரையும் சுற்றிப் பார்த்துவிட்டு சென்ற நாட்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. அமெரிக்கா முழுக்கவே பசுமையால் ஆனது என்ற எண்ணம் இருந்தாலும் இந்த நகரின் பசுமையும் குடியிருப்பை ஒட்டி உருவாக்கப்பட்ட நீண்ட ஓடையும் உடன் மனதைக் கவர்ந்துவிட்டது. என்னுடைய புதிய அலுவலகத்தை ஒட்டிய சற்று வாகன அடர்த்தியும் கடைகளின் அருகாமையும் மக்கள் நெருக்கமும் அமைந்த நகரில் இருக்க வாய்ப்பிருந்தும் ...
Comments
Post a Comment