Cathedral சிறுகதை – ஒரு பார்வையற்ற தேவதூதன்
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் 'Raymond Carver ' எழுதிய 'Cathedral' சிறுகதை , ஒரு வாசகக் குறிப்பு . பார்வையற்ற ஒரு மனிதர் , தன்னுடைய நீண்ட நாள் தோழியைப் பார்க்க அவளுடைய வீட்டுக்கு வருகை தரும் ஒரு இரவில் துவங்குகிறது இந்தச் சிறுகதை , அசாத்தியமான ஒரு இரவு அது . அந்தத் தோழியின் கணவனுடைய கண்ணோட்டத்தில் கதை விவரிக்கப்படுகிறது . அவளுடைய கணவன் சராசரியான ஒரு மனிதன் , எதிலும் நம்பிக்கையற்ற , வாழ்வில் எதையும் உதாசீனமாகக் கடந்துவிடும் , சுயநலப்போக்குள்ள ஒரு மனிதன் . பார்வையற்ற அந்த மனிதரின் வருகையை அவன் ஒருவித சங்கடத்துடனே எதிர்கொள்கிறான் , அவனுடைய மொத்த வாழ்வும் அந்த ஒரு இரவில் மாறப்போவதை அறியாமல் ! தம் மனைவிக்கும் அந்தப் பார்வையற்ற மனிதருக்குமான நீண்ட கால நட்பை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை . அவனுடைய மனைவியும் , ...