பத்திரம் - கவிதை

                                        

ஜூன், 2025

மொழியைக் கற்றேன்,

நுணுங்கிய

அர்த்தமற்ற

வார்த்தைகள்

என் முன்

முடிவற்ற வரிகளாய்,

வாசிக்க முயல்கிறேன்

புரியவில்லை,

விரோதம் பாராட்டுகிறான்

கையெழுத்திட மறுத்த

என்னிடம்

பத்திரக்காரன்,

மறுகேள்வியில்லாமல்

கையெழுத்திடு என்றான்

மகிழ்வாய் உலவிய

ஹிப்பி,

கவிஞன் சொன்னான்

கைநாட்டுகிறேன் 

என.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்