Posts

Showing posts from June, 2026

Disclosure Day - ஒரு பார்வை

Image
                                                                      கடந்த வெள்ளிக்கிழமை 'Disclosure Day' திரைப்படம் பார்த்தேன். படத்திற்கான முன்னோட்டத்தை சிலமுறை பார்த்திருந்தேன். இது வேற்று கிரகவாசிகள் குறித்த வழக்கமான ஹாலிவுட் திரைப்படமாக இருக்குமோ என்ற சந்தேகம் என்னைத் தடுத்தது. ஆனால், ஸ்பீல்பர்க் படம் என்பதால் ஆர்வமும் குறையவில்லை.  'Rosewell Incident' என்று பரவலாக அறியப்பட்ட, மிகவும் விவாதத்துக்கு உள்ளான 1980 ன் நிகழ்வை ஒட்டிய திரைப்படம் என்று விக்கிபீடியாவில் வாசித்தேன். வேற்று கிரக வாசிகள் குறித்து அரசாங்கம் மறைத்து வைத்திருக்கும் ஒரு இரகசியத்தை, இணைய பாதுகாப்பு நிபுணன் ஒருவனும், தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளராக இருக்கும் ஒரு பெண்ணும் மக்களுக்கு எடுத்துச் செல்ல முயல்கிறார்கள். அதற்கான காரணங்கள், அவர்கள் இருவரும் ஏன் இதில் தொடர்புற்று இருக்கிறார்கள் என்பதை சற்று ...

எனது கவிதைகள், சொல்வனம் இதழ்

Image
                                                                                    சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026 1) தெருவிளக்குகளே ஏன் இத்தனை தலைகுனிவு சற்றே நிமிருங்கள் , ஒளியைத்தானே பாய்ச்சுகிறீர்கள் ?   2) உறைநீர் ஏரியின் பொத்தலில் தூண்டில் அமிழ்த்திய மீனவக் கிழவன் கனவு காத்தான் குளிர் அங்கியினுள் , நிலைத்த வெளியை குறுக்கு வெட்டிக் கீறியது சிறகு படபடத்த பறவை , ஏரிக்கரை பாலத்தின் பனி விரவிய தண்டவாளத்தில் வெம்மூச்சுடன் சீறியது இரயில் வண்டி , அக்கணம் சுண்டி அடங்கியது தூண்டில்   ஒரு முறை ஒரே ஒரு முறை மீனவக் கிழவனின் கனவு கலைத்து .   3) ஊதா நிறச் சட்டைக்காரர் - அவருக்கு ஒரு பெயர் இருந்தது அந்தச் சிறிய கிராமத்தில...

ஒரு கவிதையும், விவாதமும்

Image
                                                                           "தெருவிளக்குகளே ஏன் இத்தனை தலைகுனிவு சற்றே நிமிருங்கள், ஒளியைத்தானே பாய்ச்சுகிறீர்கள்?" சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026 அன்புள்ள பாலாஜி ராஜு அவர்களுக்கு, கிட்டுகிற படைப்புகள் எல்லாம் வாசிக்கப்படுகின்றன. சில முதல் சுற்றில் மறுக்கப்பட்டு விடும். சில இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் வரை சென்று தேர்வு/ மறுப்பைப் பெறுகின்றன. சொல்கிற அளவு கறாராக இந்த முறைமை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றா லும் பெரும்பாலும் இதுதான் முறைமை இங்கு.  அதனால் சுயமாகக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு, தரத்தை எட்டியது என்று மனம் உறுதி கொள்ளும் எதையும் இங்கு அனுப்பலாம், அதுதானே படைப்பு சுதந்திரம் என்பது?  நிற்க உங்கள் கவிதைகளை பதிப்புக் குழுவுக்கு அனுப்பி விட்டேன். முடிவு கிட்ட இன்னும் 10 தினங்களாவது ஆகும்....