என் கவிதைகள் - ஆதி கலைஞன்
ஜூலை 4, 2022
உடைந்த மதுப்போத்தல்
சாலையின் ஓரத்தில்
காற்றைத் துழாவியது
தரையிறங்கிய வெள்ளைப் பறவையொன்று
கூர்மையில் கழுவேறித் துடித்தது,
இன்னும் இன்னும் என
சிவப்பு நிறம் தீட்டினான்
ஓவியன்
தூரிகை தேய்ந்து துவண்டது,
ஓவியத்தின் பூரணத்தில் திளைத்த
அவன்
கித்தானின் ஓரத்தில் எழுதினான்
தன் பெயரை
'கடவுள்'
என்று.
Comments
Post a Comment