என் கவிதைகள் - அன்னை
டிசம்பர் 21, 2021
முருங்கை மர
இலையசைவுகள்
மாடுகளின்
ஈக்கள் விரட்டும்
வால் சுழற்றல்கள்
காகங்களின் கரைதல்கள்
மயில்களின் அகவல்கள்
குயில்களின் கூவல்கள்
கருத்த மேகங்களின்
செல்ல மிரட்டல்கள்
முதல் மழைத்தூரலின்
மகா கருணைகள்
காற்றில் மண்சமைக்கும்
வாசனைகள்
ஆறுகளின்
சிலிர்ப்புகள்
வெள்ளி மீன்களின்
மினுமினுப்புகள்
மழை மழை
என
ஆனந்தக் கூத்தாடல்கள்.

Comments
Post a Comment