என் கவிதைகள் - அகழ்தல்

                                             

ஜூலை 10, 2022

காண்பவை எல்லாமே

எண்ணை வண்ண ஓவியங்களாய்

மின்னிக்கொண்டிருந்தன

தேசியக் கொடிகள் முன்

தகிக்கும் நிறங்களில்

மக்கள் நடனமாடினார்கள்

வற்றிய கண்ணங்களின்

மேடு பள்ளங்களில்

இருள் நிரம்பியது

தொம்மங்கருப்பனின் கண்கள்

மண்ணில் வரண்டு நிறமழிந்த

ஆட்டுக் குருதியை

உக்கிரமாய் நோக்கிக்கொண்டிருந்தது

அன்பு வீங்கி

சாலையோரம் மரித்த நாயின்

வயிராய் வெடித்து நாறியது

அன்னையின் முலைகளில்

சொட்டுச் சொட்டாய்

பால் ஊறியது

குழந்தைகள் கடித்துக் குதறிய

வற்றிய முலைகளில்

ஒளிர்ந்தது குருதி

எண்ணை வண்ண ஓவியமாய்.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை