என் கவிதைகள் - அலைவு

                                                


ஜூலை 4, 2022

எங்கோ ஒரு பறவை

காற்றில் அலைகிறது

உதடுகளில் என்றைக்குமான

பாடலின் பரிச்சய வரிகள்

தேகம் பரவும்

இனிமையின் விஷக் குறுகுறுப்பு

தொலைதூரத் துப்பாக்கி

தோட்டாவின்

விடுதலைக் கூச்சல்

காற்றில் 

குருதிக் கவிச்சி.


    - பாலாஜி ராஜூ


Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை