ஊர்த்துவ தாண்டவம் சிறுகதை - வல்லினம் இதழ் ஒரு கடிதம்
வல்லினம் இணைய இதழில் வெளிவந்த 'ஊர்த்துவ தாண்டவம்' சிறுகதையை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம் அவருடைய தளத்தில் வெளிவந்திருந்தது. அதன் பிரதி இங்கே,
கடிதம் எழுதப்பட்ட நாள்: நவம்பர் 21, 2021
https://www.jeyamohan.in/160217/
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
‘ஊர்த்துவ தாண்டவம்’ கதை குறித்த என் பார்வையைப் பகிர்கிறேன்,
“சிவனோட கால்கள் கொண்டது ஊர்த்துவம்ன்னா
தாட்சாயணியோட கண்கள் கண்டது அந்த ஊர்த்துவம்”
எல்லாக் கலைகளும் அதைக் கூர்ந்து ரசிப்பவர்களால் பல படிகள் எழுந்துவிடுகிறது, ‘கொண்டதை, கண்டது’ நிறைவு செய்கிறது. ஒன்றுடன் ஒன்று கலந்து இட்டு நிரப்பிக் கொண்டு, அதுவாகவே மாறி உன்மத்தம் அடைகிறது.
சிவன் சக்தியின் கதை ஒரு தொன்மம், அதன் தொடர்ச்சியாக முப்பிடாதி பொம்மி என ஒரு உண்மை நிகழ்வு, பின் முப்பிடாதி பொம்மியின் கதையும் தொன்மமாதல் என கதையில் ஒரு முடிச்சு தொடர்ந்துகொண்டே இருப்பது அரிதான பண்பு.
முப்பிடாதியும், பொம்மியும் இணைந்து நிகழ்த்தும் ஊர்த்துவ தாண்டவத்தை நவின் உக்கிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அசாத்தியமான கதை சொல்லல், வித்தியாசமான பின்புலம் என இந்தக் கதை முழுமையான ஒன்றாக மனதில் நிலைக்கிறது. எழுத்தாளர் நவினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்பும் நன்றிகளும்,
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment