Posts

Showing posts from July, 2022

என் கவிதைகள் - கவிதையொன்று

Image
                                                    ஜூலை 30, 2022 பாசி படர்ந்த குளமொன்றின் கரையில் அமர்ந்து தன்னுடைய கவிதையை எழுதினான் அநாதி கால மீன்களும் மூதுரைக்கும் ஆமைகளும் காலங்களில் மிதந்து பழுத்த இலைகளும் ஆழம் சுமக்கும் நீர்க்குமிழிகளும் நிலைத்த வெண் தாமரைகளும் நூற்றாண்டுகளாக கரையில் மீன் பிடிக்கும் சில கவிஞர்களும் அவனருகில் வந்து கவிதை விசாரித்தார்கள் (தன) கேட்கக்கூடாத கேள்வியொன்றை அவர்(வை)களிடம் கேட்டான் உறைந்த ஒரு புன்னகையை அளித்துவிட்டு தன்பணியாற்றக் கிளம்பினார்கள் (ன) மூர்க்கமாய்  நிராகரிக்கப்பட்ட ஆந்தக் கவிதை விக்ரமாதித்யன் தோளின் பூதமாய்க் கனத்தது பழுப்பேறின நாட்குறிப்பின் தாள்கள்.     - பாலாஜி ராஜூ

சிவனடியான் - சிறுகதை

Image
                                                     சிவனடியானை நான் சந்தித்தது பகல் நேரம் நீண்ட ஒரு அமெரிக்க முதுவேனில் நாளொன்றின் மாலைப்பொழுதில். கைப்பேசி அழைப்புக்கு பதிலளித்துவிட்டு நிமிர்கையில் கடந்து சென்றுகொண்டிருந்தவர், திரும்பி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். ஐந்தடியைத் தாண்டி நின்றுவிட்ட உயரமும், கூனிட்ட முதுகுடன் சற்று பக்கவாட்டில் சாய்ந்த தேகமும், நீண்ட கைகளும், முன் வழுக்கையுமாக எழுபத்து நான்கு வயது உற்சாக மனிதர். என்னை நெருங்கும்போதே அதிகம் பேசக்கூடியவர் என்று உணர்ந்துகொண்டேன்.  "நீங்க தமிழா?". "ஆமா சார்." "இல்ல நீங்க போன்ல பேசுனதக் கேட்டேன். இங்க தெலுங்கர்களும், கன்னடர்களும் கொஞ்சம் தமிழ் பேசுரத கேட்டிருக்கேன். உறுதிப்படுத்திக்கனுமில்ல?". "தமிழ்தான்" என்று புன்னகைத்தேன். "இங்க எங்க இருக்கீங்க?". "5427ல, சி பிளாக்". "ஆங்கன ஒரு பஞ்சாபி பேமிலி ரொம்ப வருசமா இருந்தாங்க, அவரு நல்லாப் பேசுவாரு. நீங்க எவ்வளவு நாளா இ...

தடம் - சிறுகதை

Image
                                                                 கேளம்பாக்கம் இரயில் நிலையத்தில் நான் நுழைகையில் எதிர்பட்ட பெரிய சுவர்க் கடிகாரம் மணி 11.36 என்று காட்டியது. பிரம்மாண்ட அரைவட்டக் கூரையினடியில் நிர்வாணத் தண்டவாளங்கள் நீண்ட கோடுகளாய் நெளிந்து வெளிச்சத்தில் மறைந்தன. மே மாத வெக்கைக் காற்று நடைமேடையில் பிளாஸ்டிக் பைகளை உருட்டிக்கொண்டிருந்தது. மென்காவியும் வெள்ளை நிறமும் கலந்த தெரு நாய் ஒன்று தாடையை முன்னங்கால்களுக்குக் கொடுத்து சொக்கிக் கிடந்தது. கரிய இரும்பு நாற்காலிகள் ஆட்களற்று, மொத்தச் சூழலும் ஒரு நிலைக்கணத்தில் உறைந்த புகைப்படக் காட்சியாய்த் தோற்றமளித்தது. ஆளற்ற இரயில் நிலையங்கள் என்னில் எப்போதும் ஏக்கம், நிலைகுலைவு, ஆழ்ந்த அமைதி, கிளர்ச்சி என கலவையான உணர்வுகளைக் கிளர்த்துபவை. இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நிலையத்தில் நுழைவதற்குள் உடலில் வியர்வையை உணர்ந்திருந்தேன். கவிதை வரிகள...

நாக்கு, அறிவியல் புனைகதை - ஒரு வாசிப்பு

Image
                                                    சிறுகதைக்கான இணையச் சுட்டி -  https://www.jeyamohan.in/53/ பஞ்ச காலங்களில் மனிதன் நரமாமிசம் உண்டிருப்பானா? அதற்கான சாத்தியங்கள் வரலாற்றில் உள்ளனவா? இந்தக் கேள்விகளை ஆசிரியர் நம்முன் வைக்கிறார். ஒரு அமெரிக்க இந்திய தொழிலதிபனுக்கு, கெய்ரோ நகரைச் சார்ந்த அவனுடைய தொழில் பங்குதாரர் விருந்து கொடுக்கிறார். இந்தியன் சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். விருந்தில் சாஷ் எனும் பிரத்யேக மது அளிக்கப்படுகிறது, அதன் சுவையில் மயங்குகிறான். இந்தியனுக்கு வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளது. அந்த நகரில் முன்னாள் வரலாற்று ஆய்வாளர் ஒருவர் நர மாமிசம் உண்ட காலத்தை எழுதி வைத்த குறிப்புகளைப் பற்றி பேசுகிறான். அவனுடைய நம்பிக்கை நாக்கின் ருசி காலம்காலமாக மருவி வேறுவடிவில் இன்னும் தொடரும் என்பது. எதோ ஒரு வகையில் தற்காலத்திலும் இந்த வழக்கம் தொடர்கிறது என்றும், அந்த நகரின் உணவு முறைகள் குறித்து அறிந்துகொள்ள விருப்பம் என்று...

நம்பிக்கையாளன், அறிவியல் புனைகதை - ஒரு வாசிப்பு

Image
                                                             சிறுகதைகான இணையச் சுட்டி -  https://www.jeyamohan.in/55/ ஒரு பேரழிவுக்குப் பின்னான சூழலில் (post apocalyptic) இறை நம்பிக்கையுள்ள மெய்யிறைப் போராளிகள் ஒன்பதுபேர் பாலைவனக் குகையொன்றில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களில் ஒரு இளைஞனும் ஒரு முதிய மதகுருவும் உள்ளனர். வெளியுலகுடனான அவர்களுடைய ஒரே தொடர்பு வானொலிப் பெட்டியொன்றால் நிகழ்கிறது. அதை அந்த இளைஞனைத் தவிர எல்லோரும் இறைவனுக்கெதிரான ஒரு கருவி என்று சாடுகின்றனர். பத்து வருடங்களாக இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறை மறுப்பாளர்களுக்கும் போர் நடந்து வருகிறது. வானொலி அறிவிப்பில் அணு ஆயுதப் போர் செய்யப்பட்டிருப்பதும், உலகமெல்லாம், நுண்கிருமிகள் உட்பட பெரும்பாலான மனிதச் சமூகங்களும் மறைந்துவிட்டதற்கான செய்தி அறிவிப்பு வருகிறது. இந்தச் செய்தியை இறை நூலில் சொல்லப்பட்ட உலக அழிவுக்கான சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு குகை...

உற்றுநோக்கும் பறவை, அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு

Image
                                                         சிறுகதைக்கான இணையச் சுட்டி -  https://www.jeyamohan.in/57/ குறுங்குழு ஒன்று உருவாகி (cult) 'துவாத்மர்கள்' எனும் மதத்தைக் கட்டமைத்து அழிவுச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பழைய தென் திருவிதாங்கூர் மகாரஜா ஆட்சியில் இது நிகழ்கிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் மனிதத்தன்மையற்ற மிருகங்களுக்கு இணையானவர்கள். இவர்களுடைய முக்தி என்பது மனிதத்தன்மையற்று, ஒரு மிருகத்தின் உளநிலையை, சுதந்திரத்தை முன்வைக்கும் ஒன்று. பல இடங்களில் கட்டற்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள், இவர்களைக் குறித்த அச்சம் மக்களிடையே ஏற்பட்டு ஒரு சாசுவதத்தன்மை அடைகிறார்கள். இந்தக் குழுவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் பிற்கால வரலாற்று ஆராய்ச்சியாளன் அல்லது பத்திரிகையாளன் ஒருவனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் குழுவை முடிவுக்குக் கொண்டுவந்த கள்ளன்துரை என்ற பிரிட்டிஷ் மேஜர் ஒருவனின் டைரிக் குறிப்புகள...

பித்தம், அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு

Image
                                                              சிறுகதைக்கான இணையச் சுட்டி -  https://www.jeyamohan.in/58/ உலகின் கண்டுபிடிப்புகள் எல்லாமே ஒருவகை பித்து நிலையில் இருந்த மனிதர்களால் மட்டுமே சாத்தியமானது. அவர்களே கனவு காண்கிறார்கள், கனவை நோக்கிப் பயணிக்கும் துணிவைப் பெறுகிறார்கள், அந்தக் கனவுக்காக பலியாகியுமிருக்கிறார்கள். இந்தக் கதை அது போன்ற ஒரு பித்து நிலையில் உள்ள மனிதனையும், அவனுடைய தேடலையும் பேசுகிறது. பித்தன் கோவில் பண்டாரம், பித்து இரசவாதத்தால் தங்கத்தை உருவாக்குவது. கதையை இரண்டு முறை வாசித்தேன். இரண்டாவது முறை ஒரு சிறுகதையின் நுண்தகவல்கள் எப்படி ஒரு சூழலை நம் மனதில் ஆழமாக உருவாக்கி, கதைக்குள் நம்மை காந்தம்போல இழுத்துக்கொள்கிறது என்பதற்கு ஒரு சான்று. பிள்ளை உண்ணும் உணவு, கூடம், தொழுவத்து மாடுகளின் கால்மாற்றக் குழம்பொலிகள், சமயலறை இருட்டு, பட்டா வந்தமரும் கல்லின் குளுமை எல்லாமே நம்...

பூர்ணம், அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு

Image
                                                                   சிறுகதைக்கான இணையச் சுட்டி - https://www.jeyamohan.in/61/ மனித மூளை, அதன் அமைப்பு, செயலபாடுகள் போன்றவை இன்னும் இயற்கை காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஒரு ரகசியப் பேழை, அதைத் திறந்து உள்ளிருக்கும் ரகசியங்களை அறிந்துகொள்ள பல நூறாண்டுகளாக மனிதன் முயன்றுகொண்டுதனிருக்கிறான். அறிவியல், தத்துவம், இலக்கியம் மற்றும் இதர கலைகள் என மனித மூளை பற்றிய குறிப்புகள் நுழையாத இடங்கள் மிகக் குறைவு.  மூளைதான் நம்மைச் செயல்படுத்துகிறது, நாம் அதன் கட்டளைகளுக்கு அடிபணியும் உடல் மட்டுமே. மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் மூளையின் அமைப்பில் தனித்தன்மை உண்டு. பிறப்பில் அடைந்துகொண்டவற்றை சூழல், அனுபவங்கள் என நாம் ஒவ்வொருவரும் மெருகேற்றிக்கொண்டிருக்கிறோம். மூளை நரம்பியல் சார்ந்த வார்த்தைகளில் சொன்னால், மூளையின் நியூரான் இணைப்புகளை விரித்துக்கொண்டே செல்கிறோ...

என் கவிதைகள் - அன்னை

Image
                                                              டிசம்பர் 21, 2021 முருங்கை மர இலையசைவுகள் மாடுகளின் ஈக்கள் விரட்டும் வால் சுழற்றல்கள் காகங்களின் கரைதல்கள் மயில்களின் அகவல்கள் குயில்களின் கூவல்கள் கருத்த மேகங்களின் செல்ல மிரட்டல்கள் முதல் மழைத்தூரலின் மகா கருணைகள் காற்றில் மண்சமைக்கும் வாசனைகள் ஆறுகளின் சிலிர்ப்புகள் வெள்ளி மீன்களின் மினுமினுப்புகள் மழை மழை என ஆனந்தக் கூத்தாடல்கள்.     - பாலாஜி ராஜூ

விசும்பு, அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு

Image
                                                   'விசும்பு' கதையின் இணையச் சுட்டி -  https://www.jeyamohan.in/62/ 'வலசை போதல்' எனும் பதத்தை நாம் எல்லோரும் ஒருமுறையாவது கேட்டிருப்போம். விலங்குகளும், குறிப்பாக பறவைகளும் பருவகால மாற்றங்களை உணர்ந்துகொண்டு இடம்பெயர்வதைக் குறிக்கும் ஒரு அழகான சொல். ஆயிரமாயிரம் மைல்கள் பயணித்து செல்ல வேண்டிய இடத்தை அடைகின்றன பறவைகள். இப்படி இடம்பெயர்வதற்கான உந்துதல் பறவைகளுக்கு எப்படி ஏற்படுகிறது? வான் எனும் பிரம்மாண்டமான கூரையின் கீழ் பறக்க அவைகளுக்கு எங்கிருந்து சக்தி கிடைக்கிறது, இலக்குக்கான பாதைகளை, திசைகளை அவை எப்படித் தீர்மானிக்கின்றன என்று எண்ணும்போதே இயற்கை எனும் பேராற்றலின் வலிமை நம்மைத் திகைக்கவைக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் 'விசும்பு' எனும் இந்தக் கதையை பறவைகளின் இடப்பெயர்வைக் களமாகக்கொண்டு அறிவியல் புனைவாக்கியிருக்கிறார். குறிப்பாக பறவைகள் திசையறிய நுண்கதிர்களைப் பயன்படுத்துவதன் சாத்தியங்களை நம்...

என் கவிதைகள் - அகழ்தல்

Image
                                                         ஜூலை 10, 2022 காண்பவை எல்லாமே எண்ணை வண்ண ஓவியங்களாய் மின்னிக்கொண்டிருந்தன தேசியக் கொடிகள் முன் தகிக்கும் நிறங்களில் மக்கள் நடனமாடினார்கள் வற்றிய கண்ணங்களின் மேடு பள்ளங்களில் இருள் நிரம்பியது தொம்மங்கருப்பனின் கண்கள் மண்ணில் வரண்டு நிறமழிந்த ஆட்டுக் குருதியை உக்கிரமாய் நோக்கிக்கொண்டிருந்தது அன்பு வீங்கி சாலையோரம் மரித்த நாயின் வயிராய் வெடித்து நாறியது அன்னையின் முலைகளில் சொட்டுச் சொட்டாய் பால் ஊறியது குழந்தைகள் கடித்துக் குதறிய வற்றிய முலைகளில் ஒளிர்ந்தது குருதி எண்ணை வண்ண ஓவியமாய்.     - பாலாஜி ராஜூ

விக்ரம் திரைப்படம் - கமல்ஹாசனின் நடுவிரல்

Image
                                                    தமிழ்ச் சூழலில் திரைப்படங்களின் தாக்கம் ஊடுருவாத ஒரு வாழ்வு ஒருவருக்கு சாத்தியமில்லை. கவனமாக விலகிச் சென்றாலும், சமீபத்திய சர்ச்சைக்குரிய அல்லது அதிகம் பேசப்படும் திரைப்படங்கள் குறித்த செய்திகள் நம்மை வந்தடைந்துகொண்டே இருக்கின்றன. ஒன்று 'கடைசி விவசாயி கடந்த நூறாண்டுகளில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலேயே உச்சம்' என மிஷ்கின் போன்ற pseudo அறிவுஜீவிகளின் உளரல்கள், அல்லது 'தமிழ்ச் சினிமாவின் வசூல் சாதனையை முறியடித்த' என்பது போல மிகவும் நூதனமாக விளம்பரப்படுத்தப்படும் செய்திகள். இதன் பிண்ணனியில்தான் 'விக்ரம்' திரைப்படத்தை நேற்று மாலை பார்த்தேன். கடந்த பத்தாண்டுகளாக திரைப்படங்களில் ஆர்வமிழந்து முழுக்க இலக்கிய வாசிப்பின் பக்கம் சென்றுவிட்டவன்தான் என்றாலும், சுவாரசியமான திரைப்படங்களை என்றும் காண விருப்பமுள்ளவன். சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அசுரன், பொல்லாதவன், ஆரண்ய காண்டம், ஜென்டில்மேன...

ஊர்த்துவ தாண்டவம் சிறுகதை - வல்லினம் இதழ் ஒரு கடிதம்

Image
                                                              வல்லினம் இணைய இதழில் வெளிவந்த ' ஊர்த்துவ தாண்டவம் ' சிறுகதையை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம் அவருடைய தளத்தில் வெளிவந்திருந்தது. அதன் பிரதி இங்கே, கடிதம் எழுதப்பட்ட நாள்: நவம்பர் 21, 2021 https://www.jeyamohan.in/160217/ அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ‘ஊர்த்துவ தாண்டவம்’ கதை குறித்த என் பார்வையைப் பகிர்கிறேன், “சிவனோட கால்கள் கொண்டது ஊர்த்துவம்ன்னா தாட்சாயணியோட கண்கள் கண்டது அந்த ஊர்த்துவம்” எல்லாக் கலைகளும் அதைக் கூர்ந்து ரசிப்பவர்களால் பல படிகள் எழுந்துவிடுகிறது, ‘கொண்டதை, கண்டது’ நிறைவு செய்கிறது. ஒன்றுடன் ஒன்று கலந்து இட்டு நிரப்பிக் கொண்டு, அதுவாகவே மாறி உன்மத்தம் அடைகிறது. சிவன் சக்தியின் கதை ஒரு தொன்மம், அதன் தொடர்ச்சியாக முப்பிடாதி பொம்மி என ஒரு உண்மை நிகழ்வு, பின் முப்பிடாதி பொம்மியின் கதையும் ...

kavithaigal.in - டிசம்பர் மாத இதழ், ஒரு கடிதம்

Image
                                                              கவிதைகள் இதழின் டிசம்பர் மாத இதழில் வெளிவந்த கவிதைகள் குறித்து ஆசிரியர் குழுவுக்கு எழுதிய கடிதம், கடிதம் எழுதப்பட்ட நாள்: டிசம்பர் 15, 2021 அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு, இந்த மாத இதழ் வாசித்தேன். அண்ணாச்சி கவிதைகளால் நிறைந்திருந்தது விருதை நோக்கிய அவருடைய பல்லக்குப் பயணத்துக்கு இன்னும் வலுவான தோள்கள் இணைந்ததற்கு சமம், நல்ல திட்டமிடல். கவிதைகள் தேர்வு நன்றாக அமைந்நிருந்தது. 'ஸ்தம்பிதம்' கவிதை நான் அண்ணாச்சியையே நோக்கிய ஒன்றாகவே எண்ணியிருந்தேன். ஜெயின் கட்டுரையை முன்மொழிந்து அவருடைய தந்தையின் பிம்பமாக கற்பனை செய்திருந்தது கூரிய பார்வை. 'ஒரு கை குறைகிறது' ஓரளவு நேரடியாகப் பொருள்படும் ஒன்றுதான், ஆனாலும் ஆழமான வாசிப்பை அளித்தது. 'பார்வை' கவிதையை முன்னரே வாசித்திருந்தேன், ஆனால் விஜய குமாரின் குறிப்பு இந்தக் கவிதையை என் மனதில் நிரந்தரமாக அறைந்துவிட்ட...

தீர்வை சிறுகதை - வல்லினம் இதழ், ஒரு கடிதம்

Image
                                                              வல்லினம் இணைய இதழில் வெளிவந்த ' தீர்வை ' சிறுகதை குறித்து எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம், கடிதம் எழுதப்பட்ட நாள்: ஜூன் 2, 2022 அன்புள்ள நவீன், வரலாற்றின் ஒரு துளியை எடுத்துக்கொண்டு, அதில் புனைவுக்கான சில சாத்தியங்களைச் சேர்த்து இன்னொரு சிறுகதையைக் கொடுத்திருக்கிறீர்கள். நாம் பள்ளியிலுருந்து கேட்டுக்கொண்டிருக்கும் 'Divide and Conquer' எனும் உத்திதான் கதையின் அடிப்படை. இதில் வஸ்தாரி வரிசை, சிலம்பாட்ட நுணுக்கங்கள் என கதை முழுக்க கற்றுக்கொள்ள வாசகனாக நிறையத் தகவல்கள் விரவிக்கிடக்கின்றன. கதையில் சிவன்பாண்டித் தேவரின் கைகளில் உள்ள நோக்கா, அது ஏற்படுத்தும் சப்தம் இரண்டின் குறியீட்டுத்தன்மைகளையும் எண்ணிப்பார்க்கிறேன். நம் மண்ணின், நம் மக்களின் இடையே இருக்கும் வேற்றுமைகளை உணர்த்தும் ஒன்றாக, அதிகாரத்தின், வலிமையின் மேல் தளத்தில் இருக்க...

இசக்கி சிறுகதை - வல்லினம் இதழ், ஒரு கடிதம்

Image
                                                              வல்லினம் இணைய இதழில் வெளிவந்த ' இசக்கி ' சிறுகதையை ஒட்டி எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம், கடிதம் எழுதப்பட்ட நாள்: மே 1, 2022 அன்புள்ள நவீன், செய்வினை செய்வது என்று பொதுவாக அறியப்படும் ஒரு நாட்டார் சடங்கு, 'காசு வெட்டுவது' என்று தென் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது என்று கதை மூலம் அறிகிறேன். ஒரு கூட்டுக் குடும்பம் அதில் தொடர் மரணங்கள், இதன் பிண்ணனியை அறிய விழையும் கதைசொல்லி என ஒரு துப்பறியும் கதையை ஒட்டிய விறுவிறுப்புடனும், நுண் விவரங்களுடனும் கதை அமைந்திருக்கிறது. கதை கடைசி வரை மையம் சிதறாமல் வாசகனாக என்னைக் கட்டிப்போடுகிறது. கதைத் தொழில்நுட்பத்தில் உங்களுடைய தேர்ச்சியை நன்றாகப் பறைசாற்றும் ஒரு கதை என்றே எண்ணுகிறேன். கதைசொல்லியாக கதை முழுக்க கூர்ந்த அவதானிப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கடைசி வரி வரை கதையைத் தாங்கிச் செல்லு...

தன்னறம் சிறுகதை - சொல்வனம் இதழ், ஒரு கடிதம்

Image
                                                                   சொல்வனம் இதழில் வெளிவந்த ' தன்னறம் ' சிறுகதையை ஒட்டி நண்பர் சு. வெங்கட்டுக்கு எழுதிய சிறு கடிதம், கடிதம் எழுதப்பட்ட நாள்: ஜூன் 30, 2022 அன்புள்ள வெங்கட், 'தன்னறம்' சிறுகதையை மூன்று முறை வாசித்தேன், உடனடியாக எழுதமுடியவில்லை மன்னிக்கவும். கதை எனக்கு பிடித்திருந்தது. நீங்கள் உரையாடலில் குறிப்பிட்ட அமெரிக்க வாழ் இந்தியச் சூழலை அழகாக கதையில் நிறுவியிருக்கிறீர்கள். கதையின் தொடக்கமும், இந்தியப் பொருட்கள் விற்கப்படும் மளிகைக் கடைகளின் அடிப்படைகளையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.  கொரொனா நோய்ச் சுழலில் இந்தியர்களைப் போன்ற புலம் பெயர் நாட்டவரின் துயரையும், அவர்களின் பலகீனங்களை வியாபார லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரமான மனிதர்களின் கதையும் அடிப்படையாக சொல்லப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் இந்திய முதலாளியே கூட...

என் கவிதைகள் - அலைவு

Image
                                                             ஜூலை 4, 2022 எங்கோ ஒரு பறவை காற்றில் அலைகிறது உதடுகளில் என்றைக்குமான பாடலின் பரிச்சய வரிகள் தேகம் பரவும் இனிமையின் விஷக் குறுகுறுப்பு தொலைதூரத் துப்பாக்கி தோட்டாவின் விடுதலைக் கூச்சல் காற்றில்  குருதிக் கவிச்சி.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - அரிதாரம்

Image
                                                         ஜூலை 4, 2022 அவள் வாசலில் தயக்கமாய் நிற்கிறாள் ஒப்பனை கலைந்த  அவள் முகம் முலைப்பால் சுவைத்து  சொக்கும் குழந்தை ஒப்பனைகள் முகங்களை மறைப்பதில்லை அவை கண்களை மறைக்கும் கள்ளங்கள் அழகி நிர்வாணக் கண்களுடன் ஒரு கணம் மோனா லிசாவாகிறாள் காற்று அவள் முகத்தை பறவையின் இறகாய் வருடிச் செல்கிறது .     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - மயக்கம்

Image
                                                                   ஜூலை 4, 2022 மேடைப்பாடகன் யாரும் பாடியிராத பிரபஞ்சப் பாடலொன்றைப் பாடுகிறான் லயத்தின் மயக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தன மனிதத் தலைகள், திருவிழாக்கள் தற்காலிகமானவை நாளையின் தனிமை மின்னி மறையும் கண்களுடன் நிராகரிப்பின் மடியில் தலைகவிழ்ந்து கொஞ்சுவான், அவன் பாடிய பாடல் நினைவின் புல்வெளிகளில் தவழும் காற்றாய் வருடிக் கரையும்.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - ஆதி கலைஞன்

Image
                                                              ஜூலை 4, 2022 உடைந்த மதுப்போத்தல் சாலையின் ஓரத்தில் காற்றைத் துழாவியது தரையிறங்கிய வெள்ளைப் பறவையொன்று கூர்மையில் கழுவேறித் துடித்தது, இன்னும் இன்னும் என சிவப்பு நிறம் தீட்டினான் ஓவியன் தூரிகை தேய்ந்து துவண்டது, ஓவியத்தின் பூரணத்தில் திளைத்த அவன் கித்தானின் ஓரத்தில் எழுதினான் தன் பெயரை 'கடவுள்' என்று.     - பாலாஜி ராஜூ