என் கவிதைகள் - பெட்டகம்
மே 22, 2022
எனக்கு ஒரு மிட்டாய்பெட்டி
பரிசளிக்கப்பட்டது
ஓவியங்கள் அடர்ந்த பெட்டியினுள்
வண்ண உடை தரித்த மிட்டாய்கள்
மிருதுவாக கடினமாக
இனிப்பு கசப்பு
என பல வடிவங்கள்
ஒவ்வொரு மிட்டாயையும் ஒரு குறிப்பிட்ட நாளில்
உண்ண விரும்பினேன்
கசப்பு நாளுக்கு இனிப்பு மிட்டாய்
மகிழ்ச்சிக்கு கசப்பு மிட்டாய்
என்று ஒரு கணக்கு
ஒரு நாள் திறக்கையில்
மிட்டாய் பெட்டி சரிந்து
மிட்டாய்கள் சிதறின
சிதறிவிட்ட மிட்டாய்களில்
எதைச் சுவைப்பது என்று குழம்பி
மீண்டும் அடைத்துவிட்டேன்
நாட்களை,
மிட்டாய் பெட்டியில்.
Comments
Post a Comment