என் கவிதைகள் - திரை

                                             


ஜூன் 27, 2022

அவனுக்கு 'போர்' அடித்தது

பொம்மைளுடன் பேசிச் சலித்து

அறை முழுக்க இரைத்தான்

மேசைகளும் நாற்காலிகளும்

அவன் பாதங்களுக்கு முதுகு கொடுத்ததில்

சலித்தான்

மூடப்பட்ட வீட்டின் இடைவெளிகள்

பரிச்சயமாகிவிட்டன

சிலேட்டில் கோடுகளைக் கீறி

சுண்ணக்கட்டியை வீசி எறிந்தான்

கடைசியாக

எப்போதும் மாறிக்கொண்டிருக்கும்

வெளியைத் திரையிடும் சாளரக் கண்ணாடியில்

கைகள் பதித்து நின்றான்,

அவன்

அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை