என் கவிதைகள் - எல்லைக்கோடு

                                       

ஜூன் 26, 2022

வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டான்

பதறித் தேடி கிடைக்கப்பெற்றான்

கதவைத் திறந்து நுழைகையில்

வாசலிலேயே உதறினான்,

ஒரு திருடனையும்

சில கருவிகளையும்

ஒரு வீடிலியையும்

கொஞ்சம் விடுதலையையும்,

வீடு சலனமற்று

ஏற்றுக்கொண்டது

அவனை.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்