என் கவிதைகள் - புரிதல்
ஜூன் 16, 2022
விழாவுக்கான உடையை
ஒத்திகைக்காய் அணிந்து
வேறொருவளாய் என்முன் நின்றவள்
கேட்டாள்
'எப்படி இருக்கிறது'
உறைந்த சில நொடிகளின் குளிரால் தீண்டப்பட்டு
'நன்றாக இருக்கிறது'
என்றேன்
'என்ன யோசிக்கிறாய்' என்றாள்
'ஒன்றுமில்லை' என்றேன்.
Comments
Post a Comment