என் கவிதைகள் - பார்வையாளன்

                                            


மே 22, 2022

உணவகம் ஒன்றினுள் நுழைந்தேன்

நாடக அரங்கம் ஒன்றினுள்

உற்சாக முகம் கொண்டு

ஆவேசக் கைவீசிச் சிரிக்கும்

மென் குரலில் பேசி

பரிதவிப்புக் கண்கள் ஒளிரும்

மதுக்கோப்பைகள் உரசி

கொண்டாடக் காரணம் தேடும்

மேசைகளுக்கிடையிலான சாலையில்

லாவகமாய் நகரும் என

தேர்ந்த கதாப்பாத்திரங்களின்

ஒப்பற்ற நாடகம்

எனக்கான உணவு கையளிக்கப்பட்டு

நாடக அரங்கக் கதவு திறந்து

என்னுடைய உலகில் நுழைந்ததும்

ஒளிர்ந்தன

பசியின் ஞாபக மின்னல்கள்.


    - பாலாஜி ராஜூ


Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை