என் கவிதைகள் - கணக்கு
ஜூன் 25, 2022
அதிகப் பரிச்சயமில்லாத
ஒரு நண்பன்
அன்று விபத்தில் இறந்துபோன
தன் அண்ணனின்
கதையைக் கூறினான்
இன்னும் வருத்தப்பட்டிருக்கலாமோ
என்று அவனும்
இன்னும் பரிதாபம் காட்டியிருக்கலாமோ
என்று நானும்
எண்ணிப் பிரிந்தோம்
வாட்ஸ்சப்பில்
'அண்ணா உன்னைப் பிரிந்து வாடுகிறேன்'
என்று செய்தியிட்டு
வரிசையாய் அடுக்கியிருந்தான்
அழுகுரல் உணர்த்தும் முகங்களை,
நானும் பதிலிட்டேன்
'R.I.P.'.
Comments
Post a Comment