என் கவிதைகள் - ஊற்றின் இரவு

                              

ஆகஸ்ட் 26, 2022

உறங்கும் குழந்தைகளின்

எடை சுமக்கும்

மஞ்சுத் தொட்டில்

மெல்ல ஆடிக்கொண்டு,

பல்லாயிரம் கன்றுகளை

ஈன்ற தேனுவின்

மடிப் பெருக்கில்

புவனத்தின்

வீதிகள் அமிழ்ந்துகொண்டு,

முலைகளின் ஊற்றில்

வீங்கும் பச்சை நரம்புகளின்

மதுரத் துடிப்பாய்

இந்த இரவு…

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை