என் கவிதைகள் - தொலைதல்

                                         


ஆகஸ்ட் 12, 2022

அசாதாரணக் காலை ஒன்றினுள் என் விழிப்பு

பறவையின் சிறகாய் உடல்

முற்றத்து மரமொன்றின் இலை ஓசை

தேவாலயப் புறாக்களின் கோபுரப் படபடப்பு

தொலைதூர வாகனத்தின் ஓசைத் தாமதம்

ஓளிக்கரங்கள் நீட்டும் பரிதியின் கருணை

மேகக் கூட்டங்களின் வெண்ணிற வெறிப்பு

 

நேற்றும் நாளையும் கலைந்து

துயரமும் உவகையும் கழிந்த

மனிதனாய் என் நிர்வாணம்

இருத்தலின் இனிமை

இருத்தலே இனிமை

 

இந்த நொடி இன்மையில் தொலைய

என் எத்தனம்

கண்களில் மெல்லக் குவியும்

நீர்க் குமிழி உடைந்து வழிவதற்காய்…

 

பிரபஞ்சமே வா

உன் மதுரக் கரங்களால்

எனை உனதாக்கு

மா சக்தியே வா

எனை உன்னில் கரைத்துக்கொள்.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை