மிட்சிகன் உரை, கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன் ஆசிரியருக்கு, 2021ம் ஆண்டிலிருந்து விஷ்ணுபுரம் விருது விழா, குரு நித்யா காவிய முகாம், பூன் இலக்கிய முகாம் என தொடர்ச்சியாக வருடம் ஒருமுறையேனும் ஒரு பெரிய நிகழ்வின் பகுதியாக உங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வருட பூன் முகாமில் கலந்துகொள்ள இயலாத நிலை. அமெரிக்க வாழ்வுக்கே உரிய சில நடைமுறை காரணங்கள். மிக்ஷிகன் மாகாணம் உங்கள் பயணத் திட்டங்களில் இருந்தது ஒரு பெரும் ஆசுவாசத்தை அளித்தது. நண்பர்கள் சங்கர் நாராயணனிடமும் மதுநிகாவிடமும் பேசி ட்ராய் நகரில் நீங்கள் பங்கேற்கும் கூடுகைக்கு முன்பதிவுசெய்துகொண்டேன், கொலம்பஸ் நகரிலிருந்து வடதிசையில் மூன்றரை மணிநேர பயணம். நிகழ்வுக்கு ஒருமணிநேரம் முன்னரே அரங்கிற்கு சென்றுவிட்டேன் (Troy Community Center). சங்கர் நாராயணன் மெல்லிய பதற்றத்துடன் அலைந்துகொண்டிருந்தார். மிக்ஷிகன்...
காராள கவுண்டரின் சாலையோர தோட்டக் கிணறு மறுபடியும் இரண்டு மலையாளிகளை உண்டு செரித்திருந்தது. கிணறு தரைமட்டத்திலிருந்து அறுபது அடி ஆழத்தில் இருபத்தைந்துக்கு நாற்பது என்ற அளவில் இருந்தது. காவிரியைத் தொட மாயனூர் செல்லும் அமராவதி ஆறு அவருடைய தோட்டத்திலிருந்து வடக்கில் இரயில் தண்டவாளத்தையும் மூன்று கிலோமீட்டர் தூர வயல்வெளிகளையும் தாண்டினால் வந்துவிடும். ஆனாலும் கிணற்றில் இருப்பதென்னவோ உப்புத்தண்ணீர்தான். காராள கவுண்டரின் நான்கு ஏக்கர் தோட்டம் இருபுறமும் புளியமரங்கள் அணிவகுக்கும் கரூர் திருச்சி மைய சாலை காளிபாளையம் தாண்டி ஆண்டிபாளையம் தொடும் இடத்தின் வளைவில் வடக்குப் பார்க்க இருந்தது. கிணறு தோட்டத்தின் சாலையை ஒட்டிய மேற்கு மூலையில் அமைந்திருந்தது. சூரியன் உச்சி தொடுகையில் சாலையோரப் புளியமரத்தின் நிழல் கிணற்றின் தண்ணீரில...
“ வானில் எரி நட்சத்திரம் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டு என் கண்களைக் கூர்ந்து நோக்கிய அவருக்கு அறுபதிலிருந்து எழுபது வயதுக்குள் இருக்கலாம். அகன்ற மார்பும் ஆறடியைத் தொடும் உயரமுமாக பொருட்களால் நிறைந்திருந்த தன்னுடைய நீண்ட வாகனத்தின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்தார். காருண்யமான கண்களும் முகச் சுருக்கங்கள் உணர்த்திய உலக ஞானமும் அவரை வசீகரமானவராகக் காட்டியது. வாகனத்தின் கண்ணாடியில் தெரிந்த உட்புறம் ‘பயணம்’ என்று வெகுளித்தனமாக உலகுக்கு அறிவித்துக்கொண்டிருந்தது. ஊதா நிற டெனிம் சட்டையை அதே நிற ஜீன்ஸ் பேன்டினுள் பொருத்தி சற்று வெளிறிய காவி நிற இடுப்புப் பட்டையும் அதே நிறத்தில் கௌபாய் பூட்சும் அணிந்திருந்தார். ஏப்ரல் மாத வசந்தகால முன் மதியம் தனகே உரிய பூரிப்புகளுடன் திழந்துகொண்டிருந்தது. சுகர் மேப்பிள் மரங்களின் வெளிற்பச்சை இலைகளிலிருந்து சிறு குருவிகளின் கொண்டாட்டமான ...
Comments
Post a Comment