என் கவிதைகள் - பிறழ்வேற்றம்
ஆகஸ்ட் 26, 2022
ஒரு சொல்
என் கைவிரல்களில் வழியும்
குருதியாய்
பல்லாயிரம் சொற்களாகப்
பெருகி,
ஒரு மிடறு மது நனைத்த
என் உதடுகள்
பலநூறு போத்தல்களுக்காய்த்
திறந்து,
உனக்கெழுதிய
ஒரு கடிதம்
பலநூறு கடிதங்களாய்
எடையுற்று,
மெல்லக் கீற
நான் செலுத்திய வாள்
உனை இரண்டாய்ப்
பிளந்து,
என்னின் ஒரு
பிம்பம்
பலநூறு கண்ணாடிகளில்
பிரதிபலித்து,
ஒற்றை மரணம்
போதாது தூதா
பலநூறு மரணங்களைச்
சுமந்து வா
என் விசாலக் கதவுகள்
உன் வருகைக்காய்…
Comments
Post a Comment