என் கவிதைகள் - ரீங்காரம்
ஆகஸ்ட் 26, 2022
நீ பூத்தொட்டிகளை
ஒளித்துவைக்கையில்
மதுப் போத்தல்களுக்கான
இருப்பிடம் தேடுகிறேன்,
இரகசிய இரவுகளில்
என் மதுப் போத்தல்களை
உறிஞ்சிச் செழிக்கின்றன
வண்டுகள் வட்டமிடும்
உன் பூக்கள்,
நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகளில்
பூக்களைப் பறிக்க
உன் பயணம்.
பாதச்சுவடுகளில் வழியும்
குருதிச் சுவைக்குச்
சொக்குபவனாய்
நான்…
Comments
Post a Comment