கவிதைகள் இதழ், ஆகஸ்ட் மாதம் - பிரமிள் கவிதைகள்
கவிதைகள் இதழ் ஆகஸ்ட் மாத வெளியீட்டில் கவிஞர் பிரமிள் கவிதைகள் இரண்டு குறித்த எனது குறிப்புகளை வெளிவந்துள்ளன. அதன் பிரதி இங்கே,
http://www.kavithaigal.in/2022/08/blog-post_508.html
ஞானத்தின் பாதைக்கு கற்பனைகள் தடையா? - பாலாஜி ராஜூ
குரு நித்யாவிடம் ஜெயமோகன் தன்னை யோகியாக பயிற்றுவிக்கும்படி
வேண்டுகிறார். குரு நித்யா யோகியாக மாற கற்பனை ஒரு மிகப்பெரிய
தடை, முற்றிலுமாக கற்பனைகளை அழித்துவிட்டே யோகிக்கான பயணத்தைத்
தொடங்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு பிறகான ஜெயமோகன் எனும்
எழுத்தாளுமையின் இயக்கங்களை வரலாறு தன் பக்கங்களில் ஆழமாய்ப் பொறித்துவைத்துள்ளது.
'ஞானத்தின் பாதைக்கு கற்பனைகள் தடையா?'
எனும் இதே கேள்வியை பிரமிள் கவிதையாக்கியிருக்கிறார். பிரமிளின் தொடக்க காலக் கவிதைகளில் ஒன்று இது (எழுத்து
இதழ், 1961, வயது 22). ஒரு படைப்பாளியின்
ஆரம்பகால படைப்புகளை வாசிப்பது, கலைஞர்களின் பழைய புகைப்படங்களை
நோக்கி வியக்கும் அனுபவத்திற்கு ஒப்பானது. பிரமிள் இளமையிலேயே
தத்துவார்த்தமான கேள்விகளைத் தாங்கி அலையும் கவிஞராக இருந்திருக்கிறார் என்பதற்கு சான்றாக
அவருடைய தொடக்க காலக் கவிதைகள் பலவற்றைச் சுட்டலாம், அதிலொன்று
இது.
ஞானத்தை அடைய மனதை வெண்தாள்ச் சூன்யமாக்கிக்கொள்ளவேண்டுமா? ('வெண்தாள்ச் சூன்யம்' – பிரமிளின் 'இறப்பு' கவிதையின் கடைசி வரிகள்). இந்தக் கவிதையில் பிரபஞ்சத்தின் இயக்கங்களை முன்வைத்து ஒரு தேடலைச் சொல்லி,
பின் அங்கிருந்து பதிலின் இழையற்ற, திரையகன்ற கேள்விகளின்
பாதையை உத்தேசிக்கிறார்.
கேள்விகள் –
முலையுறிஞ்சும் பூமிக்கு
வானெல்லாம் தொட்டிலோ?
விந்தின்னும் கருவுற்றுத்
திரளாத காரணமென்?
பூமியிலே வேரைவிட்டால்
பூக்கிறது எத்திசையில்?
சுவர்கள் (1973) –
விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.
அலைகிறது.
வெளியினூடே ஒரு நக்ஷத்திரத்தின் அழுகையில் அழைத்து வழி
காட்டிற்று.
நான் சக்ரவர்த்தியுமல்லன்.
சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்த வெளியுமல்ல –
பாலையாயினும்.
நிற்கக் கண்டவனாயினும்,
ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.
இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.
புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச்சுனையைக் காண.
Comments
Post a Comment