போகன் சங்கர் கவிதை - ஒரு எதிர்வினை

                                        


கவிஞர் போகன் சங்கருடைய கீழ்வரும் கவிதையை நேற்று காலை வாசித்தேன். வாசித்தவுடன் கவர்ந்தது, ஒரு உந்துதலால் அதை வாட்ஸப் ஸ்டேடஸில் வைத்தேன். 

"எதிர்பாராத மூங்கில்களிலிருந்து
எழும் இசை
அசவுகர்யமாக இருக்கிறது"

இரண்டுமணிநேரம் கழித்து கரூர் நண்பர் ஒருவர் 'அதெப்படி? மூங்கில்களிலிருந்து எழும் இசையானது, புல்லாங்குழலின் இனிமை போன்றது.' என்றொரு கேள்வியை எழுப்பினார். அவருக்கு இலக்கியப் பரிச்சயம் கிடையாது. இந்தக் கேள்வி ஒரு நொடி என்னை துணுக்குறச் செய்தது. இதே கவிதைக்கு 'உடனிருப்பவன்' கவிதைத் தொகுப்பை எழுதிய நண்பர் லக்ஷ்மண் தசரதன் 'Awesome One' என்று எதிர்வினையாற்றினார். ஒரு கவிதை, இரண்டு முரணான பார்வைகள், இதற்கான காரணங்கள் வெளிப்படையானதுதான். 

அந்த நண்பருக்கு 'அது ஒரு கற்பனை, அவ்வளவுதான்' என்று பதில் அனுப்பலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இதை ஏன் அவருக்கு விளக்கக்கூடாது என்று ஒரு யோசனை தோன்றியது. இந்த விளக்கம் அவருக்கு மட்டுமானதல்ல, எனக்கு நானே எழுதிக்கொண்டதும்தான். அவருக்கு எழுதிய பதில்,

"G, மூங்கில்களிலிருந்து எழும் இசை என்பது ஒரு உருவகம் மட்டுமே (just a metaphor). ஒரு ஆழுள்ளத்தின் நிலையை வாசிப்பவருக்கு கடத்த இந்தக் கவிதை அந்த மூங்கிலின் இசையைப் பயன்படுத்திக்கொள்கிறது.

நம் ஒவ்வொருவருடைய மனமும் சூழலின் ஓசைகளை, வாசனைகளை வெவ்வேறு உணர்வுகளுடன் இணைத்துவைத்துக்கொண்டிருக்கும். எனக்கு தொலைவில் நகரும் இரயிலின் ஓசை ஆழமான அமைதியையும், சோகத்தையும் அளிக்கும். இரயில் என்பது நகர்தலுடன் தொடர்புகொண்டது, நாம் நகர்ந்துவிட்ட கடந்தகால ஏக்கங்களின் பிரதிபலிப்பு ஒரு சோகத்தையும், அந்த நினைவுகளை மீட்டெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஒரு தற்காலிக அமைதியையும் இனிமையும் அளிக்கிறது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

A poem may not connect to everybody the same way, so whatever I am saying is just my perspective. There is no right or wrong here. I am glad you read it and thought about it. That's all matters. நீங்க ஒரு quarter அடிச்சிட்டு வாசிச்சா இந்த வரிகள் இன்னும் புரியும்😜."

அவருடைய எதிர்வினை,

"இப்போதைக்கு குவார்ட்டர் அடிச்சா வீட்ட விட்டு வெளியதான் போகனும் 🤷‍♂️"

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை