என் கவிதைகள் - எஞ்சியிருப்பது
ஆகஸ்ட் 18, 2022
நான்
ஒரு வானவில்லின்
அரைவட்டத்தைப் பார்க்கையில்
நீங்கள்
மறையும் சர்ப்பம் ஒன்றின்
அரை உடலைப் பார்க்கிறீர்கள்.
வானவில்லின் அரைவட்டத்தையும்
சர்ப்பத்தின் மீதி உடலையும்
இணைக்கும்
பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள
நாமிருவரும் இணைந்து
ஒரு கவிதையின்
ஒரேயொரு
சொல்லை எழுதத் தலைப்படுவோம்.
மரணம் வர்ணங்களாய்
ஒளிர்ந்து
தாமதிக்கட்டும்…
Comments
Post a Comment