Posts

Showing posts from August, 2022

விசும்பு அறிவியல் புனைக்கதை - சுட்டிகள்

Image
                                                         எழுத்தாளர் ஜெயமோகனின் 'விசும்பு' அறிவியல் புனைக்கதைத் தொகுப்பிலிருக்கும் சிறுகதைகளுக்கு எழுதிய எனது குறிப்புகளின் சுட்டிகள் இங்கே, ஐந்தாவது மருந்து https://balajirajuwrites.blogspot.com/2022/05/blog-post.html இங்கே, இங்கேயே https://balajirajuwrites.blogspot.com/2022/06/blog-post_8.html விசும்பு https://balajirajuwrites.blogspot.com/2022/07/blog-post_16.html பூர்ணம் https://balajirajuwrites.blogspot.com/2022/07/blog-post_17.html பித்தம் https://balajirajuwrites.blogspot.com/2022/07/blog-post_2.html உற்று நோக்கும் பறவை https://balajirajuwrites.blogspot.com/2022/07/blog-post_93.html நம்பிக்கையாளன் https://balajirajuwrites.blogspot.com/2022/07/blog-post_18.html நாக்கு https://balajirajuwrites.blogspot.com/2022/07/blog-post_85.html செவ்வாய் கிரகத்தில் தமிழ் இலக்கியம் h...

செவ்வாய் கிரகத்தில் தமிழ் இலக்கியம், விசும்பு தொகுப்பு - ஒரு வாசிப்பு

Image
                                                              செவ்வாய் கிரகத்தில் நிகழும் கருத்தரங்கு ஒன்றில் ஜெயமோகன் எனும் பெயரை 'உத்தேசித்துக்கொள்ளும்' எழுத்தாளன் தமிழ் இலக்கியத்தின் எதிர்கால வடிவம் குறித்து ஒரு உரையாற்றுகிறான். கருத்தரங்குக்கான காலம் நேரடியாக வரையறுக்கப்படவில்லை. பூமி முற்றிலும் அழிவுக்குள்ளானதால் பூமி வருடம், வெளி வருடம் எனும் பதங்களால் காலம் சுட்டப்படுகிறது. பூமி வருடம் 2868க்குப் பிறகான ஒரு வருடத்தில் நிகழும் கருத்தரங்கம் என்று புரிந்துகொள்கிறேன். கருத்தரங்கம் தமிழ் இலக்கியத்தின் 'வடிவம்' எனும் அம்சத்தை மையப்படுத்துகிறது. உரை தமிழ் இலக்கியம் எப்படி நாட்டார் வாய்மொழிப் பாடல்களிலிருந்து உருவாகி காப்பியங்களகவும், புரணங்களாகவும், நவீன காலகட்டத்தில் நாவல் என்று பரிணமித்ததையும் பேசுகிறது. பிறகு பின்நவீனத்துவப் படைப்புகள் தோன்றி (எடுத்துக்காட்டாக 'விஷ்ணுபுரம்' நாவல்), அதன்பின் தகவல் தொழில...

பிறப்பொக்கும் சிறுகதை, பதாகை - ஒரு கடிதம்

Image
                                                         பதாகை இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் சிறுகதை ' பிறப்பொக்கும் ' வெளியாகியுள்ளது. அதன் மூலப் பிரதியை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம். கடிதம் எழுதப்பட்ட நாள்: டிசம்பர் 31, 2021 அன்புள்ள ஜெகதீஷ் , கதையில் செந்தில் என்ற ஒரு சிறுவனை மையமாக வைத்து அவனைச் சுற்றி விரியும் சூழலைக் காட்டியிருக்கிறீர்கள். இந்தக் கதைக்குத் தேவையான துருத்தாத ஒழுக்கான எளிய நடையை அமைத்திருக்கிறீர்கள். கதையின் சூழல் 90 களின் தொடக்கத்தில் கோவையில் ஒரு சிறு நகர் சார்ந்த ஒன்று என்பது என் ஊகம் (இல்லை 80 பதுகளின் கடைசியா ?). லாட்டரி டிக்கெட் விற்பனை , நகைக்கடையில் நதியாவின் படம் , டொரினோ , டேப்ரெகார்டர் , இளையராஜா பாடல்கள் என அந்தச் சூழல் கதை முழுக்க அழகாக விரிந்துகிடக்கிறது.   சோமு உடல் ஊனமுற்ற , சுயமாக உழைக்கும் , தனக்கான துணை அமையாத விரக்தியில் வாழும் – அதற்கான முனைப்புகளில் இருக்கு...

கர்மா சிறுகதை, சொல்வனம் - ஒரு கடிதம்

Image
                                                              சொல்வனம் இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் ' கர்மா ' சிறுகதை பிரசுரமகியுள்ளது. கதையை அதன் மூலத்திலேயே வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம். கடிதம் எழுதப்பட்ட நாள்: அக்டோபர் 29, 2021 அன்புள்ள ஜெகதீஷ் , 'Karma' கதையை இரு முறை வாசித்தேன் . உங்களுக்கே உரித்தான சரளமான கதை சொல்லல் , கதாப்பாத்திரங்களின் கதையாடல் என ஒருங்கமைவான முறையில் அமைந்த கதை . கதை நான்கு குடும்பங்களின் வாழ்வை சொல்லி , அதன் விளைவான ஒரு முரண்பாடு எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என அலசுகிறது . கதை அடிப்படையில் மனித மனங்களின் கீழ்மையைச் சொல்கிறது . கடைசி நான்கு வரிகள் கதையைத் தாங்கி நிற்கிறது , உங்கள் கதைசொல்லும் திறமைக்கு சான்று . குடுக்கல் வாங்கல்களால் அமைந்துவிட்ட வாழ்வு இது , நீங்கள் யாரையும் புனிதப்படுத்தாமல் இருந்ததை ரசித்தேன் . அதற்க...

ஊனுடல் சிறுகதை, சொல்வனம் - ஒரு கடிதம்

Image
                                                         சொல்வனம் இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாருடைய ' ஊனுடல் ' சிறுகதை வெளியாகியுள்ளது. கதையை பிரதியாகவே வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம் இது. கடிதம் எழுதப்பட்ட நாள் ஜனவரி 19, 2022 அன்புள்ள ஜெகதீஷ், உங்கள் கதைகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன், முதல் வாசிப்பிலேயே இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. கதையின் சூழலுக்கேற்ற கவித்துவமான நடை மனதில் ஆழமான உணர்வுகளை என்னில் ஏற்படுத்தியிருந்தது. மாலைநேரம், தீவு, தீப்பந்தங்கள், கடற்கரை மணல், மதுபானம், உணவு, கடற்காற்று, காதலும் காமமும் ஊடாடும் மனநிலை என கதைக்கான பின்புலம் ஆழமாக நிறுவப்பட்டிருந்தது.  கதையின் முடிவில் என் கண்களில் கண்ணீர் சுரந்துவிட்டது. பிரிவாற்றாமை, காதலின் வலிமை, விரிந்த கடல், கடல் தாங்கும் நிலவு, தொலைவில் சிறு படகு என கலவையான உணர்வுகள் என்னில் கிளர்ந்திருந்தன. ஒரு தரமான சிறுகதை வாசகனின் மனதில் இந்தத் தா...

என் கவிதைகள் - ரீங்காரம்

Image
                                                         ஆகஸ்ட் 26, 2022 நீ பூத்தொட்டிகளை ஒளித்துவைக்கையில் மதுப் போத்தல்களுக்கான இருப்பிடம் தேடுகிறேன், இரகசிய இரவுகளில் என் மதுப் போத்தல்களை உறிஞ்சிச் செழிக்கின்றன வண்டுகள் வட்டமிடும் உன் பூக்கள், நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகளில் பூக்களைப் பறிக்க உன் பயணம். பாதச்சுவடுகளில் வழியும் குருதிச் சுவைக்குச் சொக்குபவனாய் நான்…          - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - ஊற்றின் இரவு

Image
                                        ஆகஸ்ட் 26, 2022 உறங்கும் குழந்தைகளின் எடை சுமக்கும் மஞ்சுத்  தொட்டில் மெல்ல ஆடிக்கொண்டு, பல்லாயிரம் கன்றுகளை ஈன்ற தேனுவின் மடிப் பெருக்கில் புவனத்தின் வீதிகள் அமிழ்ந்துகொண்டு, முலைகளின் ஊற்றில் வீங்கும் பச்சை நரம்புகளின் மதுரத் துடிப்பாய் இந்த இரவு…     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - பேரன்பின் நாள்

Image
                                                         ஆகஸ்ட் 26, 2022 இன்றைய நாள் அரிய பரிசொன்றாய் நமக்கு அளிக்கப்படுகிறது . மஞ்சள் பூக்கள் படர்ந்து புல்வெளிகள் மின்னுகின்றன மனிதர்கள் மகிழ்வாய் அங்குமிங்கும் அலைகிறார்கள் பரிதி கருணையாய் ஒளிக்கரங்களை நம்மேல் நீவுகி றது மழைத்தூரல் சாய்வாய்ப் பொழிகிறது இன்று நாம் தயக்கமாய் ஒளித்துவைத்திருக்கும் அன்பை வெளிக்கொணரலாம் எதிர்படும் மனிதனை நோக்கி புன்னகை ஒன்றை உதிர்க்கலாம் மென்பாடல் ஒன்றை முனகலாம் என்றோ வாசித்த கவிதை வரியொன்றை நினைவுகூரலாம் நம் நிர்வாண உடல் மீது அன்பின் சாட்டையை வீசும் பரிச்சயர்களை சிரித்துக்கொண்டே கொலைகூடச் செய்யலாம் .     -   பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - பிறழ்வேற்றம்

Image
                                                         ஆகஸ்ட் 26, 2022 ஒரு சொல் என் கைவிரல்களில் வழியும் குருதியாய் பல்லாயிரம் சொற்களாகப் பெருகி, ஒரு மிடறு  மது நனைத்த என் உதடுகள் பலநூறு போத்தல்களுக்காய்த் திறந்து, உனக்கெழுதிய  ஒரு கடிதம் பலநூறு கடிதங்களாய் எடையுற்று, மெல்லக் கீற நான் செலுத்திய வாள் உனை இரண்டாய்ப் பிளந்து, என்னின் ஒரு பிம்பம் பலநூறு கண்ணாடிகளில் பிரதிபலித்து, ஒற்றை மரணம் போதாது தூதா பலநூறு மரணங்களைச் சுமந்து வா என் விசாலக் கதவுகள் உன் வருகைக்காய்…        - பாலாஜி ராஜூ