என் கவிதைகள் - திரும்புதல்
டிசம்பர் 14, 2019
என்
அறை
முழுக்க
கடிகாரங்கள்
சில
ஓசை எழுப்பி
சில
தன்னுள்
உய்ந்து
என் நாட்களை நகர்த்துவதில்
எத்தனை முனைப்பு
கடிகாரங்களுடன் பேசி
சமரசம்
செய்துகொண்டேன்
எதிர்
திசையில்
சுழல்வதாக
ஒரு புரிதல்
என் நரைமுடிகள் மறைந்தன
உடல்
ரணங்கள்
கரைந்தன
இலகுவானேன்
மீண்டும்
இருட்டறை.
- பாலாஜி ராஜூ
Comments
Post a Comment