என் கவிதைகள் - ரணம்
மார்ச் 26, 2022
நுனி நாக்கை
கடித்துக்கொண்டேன்
அறிந்தவர்
சொற்களில்
ஆதூரம் கூடிவிட்டதாக
நெகிழ்ந்தார்
காதலி
கலவியில்
புது உருவெடுப்பதாக
குலவினாள்
மனையாள்
உணவின்
சுவை அறிந்தவனாக
மாறிவிட்டாய்
என்றாள்
நண்பன்
பேச்சில்
நஞ்சு மறைந்ததை
வியந்தான்
எல்லோரும்
புது மனிதனாக
வலம் வருவதாக
கிசுகிசுத்தார்கள்
நானும்
தலையாட்டி
ஆமோதித்தேன்
இரகசியமாக
நாக்கின் ரணத்தில்
வடியும்
உதிரத்தை
சுவைத்துக்கொண்டே.
Comments
Post a Comment