சில பயிற்சிக் குறுங்கவிதைகள்
ஏப்ரல் 1, 2019
இருண்ட கானகத்தில்
தொலைந்தேன்
நிலவின் கைகள் பிடித்து
வீடடைந்தேன்.
நவம்பர் 9, 2019
கவிதை என்றுதான்
நினைத்துக்கொண்டிருந்தேன்
எழுதியதை
கவிதை என்றே
நினைத்துக்கொண்டதாக
சொன்னது கவிதை.
ஜூலை 23, 2017
கடல் கண்டோம்
மணல் அளைந்தோம்
வீடு திரும்பினோம்
வீடெங்கும்
அலைகளின் ஓயாப் பேச்சு
காலிடுக்குகளில் மணற்துகள்.
Comments
Post a Comment