என் கவிதைகள் - குளமும் ஒரு கனவும்
அகஸ்ட் 27, 2021
தனிமை சுவாசிக்கும்
குளமொன்றினுள்
கற்களை வீசிக்கொண்டிருந்தான்
சிறுவனொருவன்
கற்களின்
எடையில்
திணறிய
குளம்
மேலெழுந்தது
ஆயிரம் முத்தங்கள் தாங்கி
கைகளை நீட்டிய
சிறுவன்
ஓடிவிட்டான்
தாய்மையின் குரல் கேட்டு
தொடர்ந்தன
முத்தப் பரிமாற்றங்கள்
சிறுவனின் கனவுகளில்
குளமும்
குளத்தின் கனவுகளில்
சிறுவனும்.
- பாலாஜி ராஜூ
Comments
Post a Comment