என் கவிதைகள் - காத்திருப்பு

பிப்ரவரி 22, 2022

அற்புதம் ஒன்றைக் கண்டேன்

முகிழ்ந்து திளைத்தேன்

பேராசையோடு

சொற்களால் சிறைப்படுத்த

நெருங்கினேன்


தோற்றேன்

வெகுதூரம் நகர்ந்தேன்


அற்புதம் என்னை

பின் தொடர்ந்தது

என் இயல்புகளை

உதறிவிட்டேன்

சமநிலையிலிருந்து

தொடங்குவோம் வா

என்றது


நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்

தெரியுமா என்றேன்


சற்று திகைத்து

பின்னோக்கி நகர்ந்தோம்

எதுவும் பேசிக்கொள்ளாமல்.


    - பாலாஜி ராஜூ    

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை