என் கவிதைகள் - களைதலும் கலைத்தலும்

                                    

                                                      

மார்ச் 15, 2022

பேனாக்கள் நிறைந்த

கலசத்தை

கவிழ்த்துக் கலைப்பது

இரண்டு வயதின்

வாடிக்கை


பேனாக்களை

மீண்டும் கலசத்தில்

அடுக்குவது

அவளுடைய

வாடிக்கை

 

கலைக்கப்படுவதுதானே

ஏன் அடுக்குகிறாய்

என்றேன்

 

கலைக்கப்படவேண்டும்

என்றுதான் அடுக்குகிறேன்

என்றாள்.


    -  பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை