என் கவிதைகள் - முள்

                                                

மார்ச் 18, 2023

வனங்களில் சிலிர்த்தலைந்த
மிருகமொன்றின்
சதைத் துண்டம்
அலங்காரமாய் வீற்றிருந்தது
என் உணவுமேசையில்

அதன் மினுமினுப்பில்
மயங்கிக்கொண்டிருந்த வேளை
என் காதுகளைத்
துளைத்தன
அந்த வார்த்தைகள்

"வெம்மை குறையுமுன்
தொடங்கிவிடு"
என

ஆவேசமாய்
முள்கரண்டியைச் செலுத்தி
கீறிடத்தொடங்கினேன்
என் சதைகிழித்து
என்னை நானே.

        - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை