என் கவிதைகள் - கருவி
மார்ச் 11, 2023
நகர முற்றத்தில்
புகைப்படநிலையத்தின்
கதவுகளைத் திறந்து
விடுவிக்கிறான்
புகைப்படக்கலைஞன்
நேற்றைய புன்னகைகளை
கொத்தோடு அள்ளிக்
கூட்டிவீசினான்
போலிப் புன்னகைகளை
தரையில் அப்பிக்கிடந்த
புன்னகைக்காத உதடுகளின்
இறுக்கப் பிசுபிசுப்புகளை
நறுவிசாக வழித்தெடுத்தான்
சுவற்றில் மாதிரிப்படத்தின்
வசீகரச் சிரிப்பை
ஒட்டடையாகத்
தடவிக்கொண்டிருந்தது
என்னுடைய புன்னகை
ஒன்று.
Comments
Post a Comment