என் கவிதைகள் - உயரம்
நானும் அவனும்
ஒன்றாகப் பட்டம்
விட்டுக்கொண்டிருந்தோம்
அவனுடைய பட்டங்கள்
கடலடி நீரின்
விடுபட்ட குமிழிகளாய்
முனைப்புடன் எம்பி
மேகங்களை முகர்ந்தன
என்னுடைய பட்டங்கள்
அவசரமாய் சாலையைக்
கடக்கும் சாரையாய்
பக்கவாட்டில் நெளிந்து
புவியின் ஈர்ப்பைப்
பற்றிக்கொள்ள ஊடுருவின
அவன் சொன்னான்
பட்டம் விடுதலின்
இரகசியத்தை
"நன்றாக வான்நோக்கி
அன்னாந்து பார்"
என.

Comments
Post a Comment