நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்
சமையல்கட்டு காரைச் சுவரின் பிளவினுள் வெள்ளந்தியாக நுழைந்த புழக்கடை மருதாணிச் செடியின் கிளை அன்னம்மாளிடம் எதையோ சொல்வது போல அசைந்துகொடுத்தது . இரவுப் பூச்சிகள் சூரியனுக்கு வழியனுப்பச் சப்தமிட்டன . சமையல்கட்டை ஒட்டிய திறந்த முற்றத்தில் , மச்சின் சிதைந்த கைப்பிடிச் சுவர் தன் கம்பிக்கூட்டு உடலைத் தரையில் நிழலாகப் பதித்தது . கட்டுச் சோற்றுக்காக உலையில் கொதித்துக்கொண்டிருந்த அரிசியைக் கரண்டியில் எடுத்து அழுத்திப் பார்த்து , இறுகிய பதம் இருக்கையிலேயே கஞ்சியை வடித்தாள் . பொம்னாபாடியாருக்காக கஞ்சியில் உப்பு சேர்க்காமல் பூண்டு , சீரகம் , வெந்தயம் இட்டு மென்சூட்டில் கொதிக்கவைத்தாள் . முன்பெல்லாம் சமையல்கட்டுச் சுவரின் விரிசல்களை களிமண்ணும் சுண்ணமும் வைத்து அடைப்பதும் , அதை மீறிப் புகுந்து தலைகாட...

Comments
Post a Comment