எனது கவிதைகள் - நிறம்
மார்ச் 5, 2023
முட்டையுடைத்து காற்றை
விழுங்கும்
குட்டிப் பாம்பின் தடங்களில்
அன்னையின்
உயிர்க் கவிச்சி
தண்ணீர் லாரியின்
கொப்பளிப்பை
விழுங்கிப் பெருமூச்சிடும்
பெருநகர வீதிகள்
வரண்ட ஆற்றுக்
குழிக்காயங்களின்
ஊற்றுநீரைத்
தானுண்ணும் மணல்பரப்புகள்
பக்கவாட்டில் உறங்கும்
குருட்டுப் பிச்சைக்காரன்
கன்னத்தில் வழியும்
வண்ணக் கனவுகளின்
தூரிகைத் தெறிப்புகள்
ஊறி ஊறித் தேங்கும்
உமிழ்நீரின்
எச்சில் நுரைகளில்
கவிஞனின்
வியர்வைப் புளிப்பு.
Comments
Post a Comment