என் கவிதைகள் - இன்மை

                                        

மார்ச் 11, 2023

மனிதம் கூட்டமாய்

தேவாலயங்களுக்குள்

தொழுதுகொண்டிருந்தது


தேவாலயங்கள் 

சிலுவைகளை உயர்த்தி

வான் நோக்கிக்

கூவிக்கொண்டிருந்தன


வான் நெடிந்து பரவி

பிரபஞ்சத்திடம்

விடை தேடிக்கொண்டிருந்தது


பிரபஞ்சங்கள் வரிசையாய்

முடிவிலிகளிடம்

தம் கோரிக்கைகளை

அடுக்கிக்கிடந்தன


கடவுள் 

இருண்ட கருவறைக்குள்

புழுக்கத்துடன்

புரண்டுகொண்டிருந்தான்.

   - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை