என் கவிதைகள் - ரணம்
மார்ச் 26, 2022 நுனி நாக்கை கடித்துக்கொண்டேன் அறிந்தவர் சொற்களில் ஆதூரம் கூடிவிட்டதாக நெகிழ்ந்தார் காதலி கலவியில் புது உருவெடுப்பதாக குலவினாள் மனையாள் உணவின் சுவை அறிந்தவனாக மாறிவிட்டாய் என்றாள் நண்பன் பேச்சில் நஞ்சு மறைந்ததை வியந்தான் எல்லோரும் புது மனிதனாக வலம் வருவதாக கிசுகிசுத்தார்கள் நானும் தலையாட்டி ஆமோதித்தேன் இரகசியமாக நாக்கின் ரணத்தில் வடியும் உதிரத்தை சுவைத்துக்கொண்டே. - பாலாஜி ராஜூ