Posts

Showing posts from 2024

2024 - வாசித்த புத்தகங்கள்

Image
                                                       2024ம் ஆண்டு வாசித்த புத்தகங்களின் பட்டியல், நாவல்கள், தமிழ் -  1. காண்டீபம் - ஜெயமோகன் 2. படுகளம் - ஜெயமோகன் 3. வெய்யோன் - ஜெயமோகன் 4. பிறகு - பூமணி 5. பன்னிரு படைக்களம் - ஜெயமோகன் நாவல்கள், ஆங்கிலம் -  1. Einstein's Dreams - Alan Lightman சிறுகதை தொகுப்பு -  1. சங்கிலி பூதத்தான் - நாஞ்சில் நாடன் 2. கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன? - பெருந்தேவி 3. திசைகளின் நடுவே - ஜெயமோகன் 4. இசூமியின் நறுமணம் - ரா. செந்தில்குமார் கவிதை தொகுப்பு -  1. சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை 2. சுகுமாரன் கவிதைகள் - சுகுமாரன் 3. உலோகருசி - பெருந்தேவி 4. சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன், மொழிபெயர்ப்பு - பெருந்தேவி 5. தடித்த கண்ணாடி போட்ட பூனை - போகன் சங்கர் 6. திரிபுகால ஞானி - போகன் சங்கர் 7. மாயப்பாறை - மதார் 8. வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் - வேணு தயாநிதி...

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

Image
                                                            அன்புள்ள கார்த்திக், ஆகஸ்ட் 21ம் தேதி 'முடிந்தால் இன்று அழைக்கவும்' என்ற உன் குறுஞ்செய்தியை வழக்கமான ஒன்றாகவே எண்ணியிருந்தேன். நம்மிடையேயான உரையாடலை எப்போதும் நீயே துவக்குவாய். அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்ததால் பின்னர் அழைக்கிறேன் என்று பதில் எழுதினேன். 'நான் மிகவும் உடல் நலிந்திருக்கிறேன், உடனே அழைக்கவும்' என்ற அசாதாரணமான செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. 'தீவிரமான் மஞ்சள் காமாலை' என்ற உன் செய்தி என்னில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அது ஈரல் தொடர்பான ஒன்று என்பதை உணர்ந்து உடனே அழைத்தேன். அதிகம் பேசக்கூட இயலாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாய். இந்த நான்கு மாதங்களில் உன் உடல் மிகுந்த நலிவுற்றது, பனிரண்டு கிலோ எடை இழந்து எலும்புக்கூடாய் காணொலி அழைப்பில் உன்னை பார்த்த அதிர்ச்சி என்னில் இப்போதும் இருக்கிறது.  அவ்வப்போது உடல் தேறிவிட்டத...

2024 - செய்தவையும் தவறியவையும்

Image
                                                       2024ம் வருடத்தில் இலக்கியம் சார்ந்து அடைய எண்ணுபவை என கீழ்கண்டவற்றை நண்பர்களின் குழுவில் பகிர்ந்திருந்தேன். இப்போது திரும்பிப் பார்க்கையில் பெருபாலும் எண்ணியவற்றை விட அடைந்தவை பல படிகள் கீழ் நிற்கின்றன என்று தெரிகிறது. Here is what I am setting myself up to for the year. Hoping not to fall too short of this (I might have to play catch up in the last six months, but let's see) Writing 10 Short Stories (Not able to comment on Poems, it kind of comes and goes) நான்கு சிறுகதைகள் எழுதி முடித்திருக்கிறேன். இரண்டு சிறுகதைகளில் சில பத்திகள் மட்டும் எழுதி வைத்திருக்கிறேன். மனதில் கருவாக இருப்பவை மூன்று. எழுதியவற்றில் ஒன்றை சொல்வனம் இதழுக்கு அனுப்பினேன் அதனால் பதிவேற்றவில்லை, நிராகரிப்புக்கான வாய்ப்புகள் அதிகம். பதில் வந்த பிறகு பதிவேற்றுவேன் (கதையின் பெயர் 'ஐஸ்கிரீம்').  இரண...

இசூமியின் நறுமணம் - ஒரு வாசிப்பு

Image
                                                                 இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பை சென்ற வருடம் கரூர் வருகையில் வாங்கினேன். ஆனால் விமானத்தில் கொண்டுசெல்லவேண்டிய பொருட்களில் மற்றவை இடம் எடுத்துக்கொண்டதால் சில புத்தகங்களை கரூரிலேயே வைத்துவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வருட நவம்பர் மாதம் முழுக்க கரூரில் இருந்தேன். மனம் வாசிப்புக்கு அடங்காமல் திமிறிக்கொண்டிருந்தது. அரைமனதோடும் ஒருவித குற்றஉணர்வோடும் சிமெண்ட் அலமாரியில் இருந்த அட்டைபெட்டியை தூசுதட்டி, வைத்திருந்த புத்தகங்களில் அளவில் சிறியது என்பதால் இந்த தொகுப்பை வாசிப்புக்கு எடுத்தேன். ரா. செந்தில்குமார் ஜப்பானில் புலம்பெயர்ந்து வாழ்பவர், ஜெயமோகனின் வாசகர். சிலவருடங்களுக்கு முன் இந்த தொகுப்பின் வெளியீட்டு விழாவில் ஜெயமோகனின் உரையைக் கேட்டிருந்தேன். நான் இன்றைய சூழலில் எழுதும் அதிகம் பெயர் அறியப்படாதவர்களின் தொகுப்புகளை பரவலாக ...

கரூர் பயணம் 2024

Image
                                                               அமெரிக்காவில் இதுவரை பத்து குளிர்காலங்களை கழித்திருக்கிறேன். கோவிட் தொற்று வருடங்களான 2020 2021ம் ஆண்டுகள் தவிர ஒன்பது முறை கரூர் பயணம் செய்திருக்கிறேன். ஊர் குறித்த எண்ணங்கள் மெல்ல ஒரு ஏக்கமாக தொடங்கி இயல்பான பயணத் திட்டமாக உருமாறிவிடும். பொதுவாக பத்து வருடங்கள் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சொந்த ஊருக்கு வருகை தருவதை பல வருட இடைவெளில் மட்டுமே நிகழ்த்துவார்கள், சிலர் அதை முழுமையாகவே தவிர்ப்பார்கள். அகம் புறம் என அதற்கான காரணங்களும் தர்க்கங்களும் நிறையவே உண்டு. இந்த முறை என்னைவிட மனைவி ஊருக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டினாள். நான் அடுத்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் அதை திட்டமிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அவள் தன்னுடைய தம்பியின் திருமணத்திற்கு செல்ல இயலவில்லை, வளைகாப்பு சடங்கிற்கு செல்லவேண்டும் என்பதில் உறுத...

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

Image
                                                            மிட்சிகன் உரை, கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன் ஆசிரியருக்கு, 2021ம் ஆண்டிலிருந்து விஷ்ணுபுரம் விருது விழா, குரு நித்யா காவிய முகாம், பூன் இலக்கிய முகாம் என தொடர்ச்சியாக வருடம் ஒருமுறையேனும் ஒரு பெரிய நிகழ்வின் பகுதியாக உங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வருட பூன் முகாமில் கலந்துகொள்ள இயலாத நிலை. அமெரிக்க வாழ்வுக்கே உரிய சில நடைமுறை காரணங்கள். மிக்ஷிகன் மாகாணம் உங்கள் பயணத் திட்டங்களில் இருந்தது ஒரு பெரும் ஆசுவாசத்தை அளித்தது. நண்பர்கள் சங்கர் நாராயணனிடமும் மதுநிகாவிடமும் பேசி ட்ராய் நகரில் நீங்கள் பங்கேற்கும் கூடுகைக்கு முன்பதிவுசெய்துகொண்டேன், கொலம்பஸ் நகரிலிருந்து வடதிசையில் மூன்றரை மணிநேர பயணம். நிகழ்வுக்கு ஒருமணிநேரம் முன்னரே அரங்கிற்கு சென்றுவிட்டேன் (Troy Community Center). சங்கர் நாராயணன் மெல்லிய பதற்றத்துடன் அலைந்துகொண்டிருந்தார். மிக்ஷிகன்...

சட்டகம் - கவிதை

Image
                                                       ஆகஸ்டு 18, 2024 பரிசுத்தமான வானின் ஊதா நிற அதிசயங்கள் தாளாமல் மரத்தின் கிளையினூடாக மறைந்து காண்கிறேன், சாளரச் சட்டகங்களின் இடைவெளியில் ஒளிந்து காண்கிறேன், நீ ஒரு ஓவியத்தினுள் வாழ்கிறாய் என்று சொன்னது வானின் அசரீரி, இந்த ஓவியத்தில் நான் யார் என்று கேட்டேன் அதனிடம், 'ஓவியம் தாங்கும் சட்டகத்தின் விளிம்பில் கிறுக்கப்பட்டிருக்கும் வாசிக்க கிட்டாத பெயர் நீ' என்று சொன்னது அசரீரி.   - பாலாஜி ராஜூ

குவளை - கவிதை

Image
                                                              ஆகஸ்ட் 18, 2024 வயதொத்தவர்களின் இறப்புச் செய்தி வந்தவண்ணமிருக்கிறது, முற்றிலும் அருந்தப்படாத மதுக்குவளையின் சிதறல் கனவுகளில் துரத்துகிறது, இப்பொழுதெல்லாம் சொட்டு மிச்சமில்லாமல் அருந்திவிடுகிறேன் பிரபஞ்சம் என்னிடம் அளிக்கும் மதுக்குவளைகளை, காலியான குவளைகள் பஞ்சுபோல காற்றில் மிதப்பவை என ஏனோ கற்பிதம் கொண்டேன், பளிங்குக் கண்ணாடியும் இறுகிய தரையும் இரகசியமாய் சிரித்துக்கொண்டதை அறியாமல்.   - பாலாஜி ராஜூ

Deadpool & Wolverine - ஒரு Deadpool ரசிகனின் புலம்பல்

Image
                                                            இயக்குனர் மார்டின் ஸ்கார்செஸி (Martin Scorsese) மார்வெல் திரைப்படங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை (Amusement Park Films) என சொல்லியிருந்தார். அழமான உணர்வுகளோ கதைக்களங்களோ அற்ற திரைப்பட உருவாக்கத்தை மட்டுமே சார்ந்திருக்கும் மலிவான ஆக்கங்கள் என்பதே அவருடைய பார்வை. மார்வெலின் சில திரைப்படங்களைக் காண முயன்று ஆழ்ந்து செல்ல இயலாமல் வெளிவந்திருக்கிறார். மார்வெல் திரைப்படங்கள் குறித்த என்னுடைய அனுபவமும் பார்வையும் அதுவே. என்னுடைய வாசிப்பை நான் காமிக்ஸ் புத்தங்களில் இருந்தே தொடங்கினேன். பெரும்பாலும் வன்மேற்கு நிலத்தைச் சார்ந்த கதைக்களம் அமைந்தவற்றையே அதிகமும் வாசித்தேன். சூப்பர் ஹீரோ பாத்திரங்களில் முகமூடி வீரார் மாயாவியையும் வாசித்திருக்கிறேன். இந்த புத்தகங்களில் கூட அடிப்படையான கதைக்களமும் இயல்பான மனித உணர்வுகளும் அமைந்திருக்கும். சூப்பர் ஹீரோ பாத்திரங...

'சங்கிலிப் பூதத்தான்' சிறுகதைத் தொகுப்பு, நாஞ்சில் நாடன்

Image
                                                            நாஞ்சில் நாடனின் நாவல்களில் தலைகீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை, மிதவை, கட்டுரைத் தொகுப்புகளில் தீதும் நன்றும், எப்படிப் பாடுவேனோ, சிறுகதைத் தொகுப்புகளில் சூடிய பூ சூடற்க, கொங்குதேர் வாழ்க்கை ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். அவருடைய நாவல்கள் யதார்த்தவாத இலக்கிய வகைமையைச் சார்ந்தவை. குறிப்பாக மிதவை, சதுரங்கக் குதிரை நாவல்கள் என் மனதுக்கு மிக நெருக்கமானவை. பிழைப்பிற்காக மும்பை சென்று வாழும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் வாழ்வை அந்த சூழலின் பிண்ணனியில் உயிர்ப்போடு எழுதியிருப்பார். சங்கிலிப் பூதத்தான் தொகுப்பிலிருக்கும் பதினேழு சிறுகதைகளும் ஆனந்த விகடன் இதழில் வெளியானவை. இவற்றின் பெரும்பாலான கதைகளை மற்ற தொகுப்புகளிலும் விகடனிலும் முன்னரே வாசித்திருந்தேன். சிறுகதைகளை சில ஆண்டுகள் இடைவெளியில் மறு வாசிப்பு செய்கையில் முந்தைய வாசிப்பில் அடையாதவை இன்னும் துலக்கமாக...

On the Move: A Life - Oliver Sacks

Image
                                                            சுய வரலாற்று புத்தகங்களை ஏன் வாசிக்கிறோம்? நவீன வாழ்வின் மனிதர்களுக்கு ஆர்ப்பாட்டமற்ற மாறாச் சுழல் போன்ற வாழ்வு அமைந்துள்ளது. அத்தகைய வாழ்வின் மிகவும் கணிக்கக்கூடிய நகர்வு விருப்பத்துக்குரியதாக இருந்தாலும் நாளடைவில் சிறிய சலிப்பு உருவாகிவிடுகிறது. இதில் சிலர் பயணம், கலை என புதிய பாதைகளில் பயணித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமாவதில்லை. மன அமைப்பு குடும்ப சூழல் என பல காரணிகள் இருக்கலாம். ஒரு புத்தக வாசகனும் மேற்குறிப்பிட்ட நவீன வாழ்வின் கட்டுக்களில் அகப்பட்டவனாகவே இருக்கிறான். சுய வரலாற்று நூல்கள் அத்தகைய கட்டுக்களில் இருந்து வெளியேற வாழ்வை மாற்றுக்கோணத்தில் அணுக பல பாதைகளை அளிக்கின்றன. சரி, யாருடைய சுய வரலாற்று அனுபவங்களை வாசிக்க விரும்புகிறோம்? நம் அன்றாட வாழ்விலிருந்து முற்றிலும் விலகிய புதிய பாதைகளில் பயணிக்கும், பித்தும் அதி உத்வேகமும் அம...

ஐன்ஸ்டீனின் கனவுகள், நாவல் - ஒரு பார்வை

Image
                                                            காலத்திற்கும் நமக்குமான பிணைப்பு என்ன? காலத்தை நாம் என்னவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்? ஒரு உருவகமாகவா? காலமும் இடமும் இணைந்த ஒன்று என விளக்கும் சார்பியல் கொள்கை வாயிலாகவா?  காலம் நம்முடைய பிரக்ஞையில் ஆழமாகப் பிணைந்துவிட்ட ஒன்று. நம்முடைய ஆழமனதில் அருவமாக அமைந்துவிட்ட ஒன்று என்பதால் அதை தர்க்கப்படுத்திப் புரிந்துகொள்வது நம்முடைய அறிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே விளங்குகிறது. காலத்தை அறிவியலின் சமன்பாடுகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். ஒரு ஆறிதல் எனும் வகையில் அறிவியல் வாயிலாக புரிந்துகொள்வது நமக்கு நிறைவளிக்கலாம். ஆனால் அதன் அருவத்தன்மையால் நமக்குள் உள்ள ஆழமான கேள்விகளுக்கு பதில் தேட தத்துவத்தையும் குறிப்பாக மீபொருண்மைத் தளத்தையுமே நாம் இயல்பாக நாடுகிறோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் ஒரு காப்புரிமை குமாஸ்தாவக வேலைசெய்கி...

ஏசுவின் காதலி - சிறுகதை

Image
                                                            கொலம்பஸ் நகரில் மெக்ஸிகோ தேசத்தவர்களை எங்கும் காணலாம். பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் புல் வெட்டுபவர்களாக, அவர்களுக்கே உரிய சிறிய தெருக்களில் அமைந்த வீடுகளிலும் தெருக்களின் ஓரத்திலும் கால்பந்தாடுபவர்களாக, டெக்கரியா என்று அழைக்கப்படும் மெக்ஸிகோ தேசத்தின் பிரத்யேக உணவகங்களில் உண்பவர்களாக பரிமாறுபவர்களாக, தூசு பொதிந்த பழைய ட்ரக்குகளில் சாலைகளைக் கடப்பவர்களாக அவர்கள் தென்படுவார்கள். இந்தக் கதையின் மையமாக மெக்ஸிகோ தேசத்தின் அழகி ஒருவள் இருக்கிறாள். கோடைக்கால ஜூலை மாதத்தின் வெப்ப அலை பரவிய மாலையில் அவள் எங்கள் குடியிருப்பின் இரண்டடுக்கு வீடுகளில் பக்கவாட்டு கட்டிடத்தில் அண்டைவீட்டுக்காரியாக வந்து சேர்ந்தாள். டெக்ஸாஸ் என்ற பெயர் தாங்கிய மினி வேனில் தம் பெற்றோருடனும் ஒல்லியான தம்பியுடனும் வந்து இறங்கினாள். அவளுக்கு இருபதிலிருந்து இருபத்தைந்து வயதிருக்கலாம்....

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - மறுவாசிப்பு

Image
                                                         ‘ மரணத்தை எந்தவிதமான தத்துவ உதவியுமில்லாமல் எதிர்கொள்ளும் மனிதன் எத்தனை பரிதாபகரமானவன் ’. சுந்தர ராமசாமியை தன்னுடைய ஆசிரியராக ஆத்மார்த்தமாக உணரும், அவருடைய இறுதிக்காலத்தைப் பற்றி மிகுந்த அக்கரையோடு விசனப்படும் ஜெயமோகனின் மனதில் ஊறிய சொற்கள் இவை. சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் மாலைநடை செல்கிறார்கள். விழுது பரப்பி நிற்கும் ஒரு ஆலமரத்தின் அடியில் திகைத்து நிற்கும் சுந்தர ராமசாமி முடிவின்மை குறித்து ஜெயமோகனிடம் மனம் பொங்கிப் பேசுகிறார், ‘பூமி முழுக்க நிறைஞ்சிருக்கிற உயிர் எவ்ளவு பயங்கரமா இருக்கு? மூர்க்கம்’. ‘சிருஷ்டி கொந்தளிச்சுண்டு இருக்கு’. தன்னுடைய இறப்பு அந்த ஆலமரத்தின் அடியில் நிகழவிருப்பதாக எண்ணியதையும் ஆலமரத்திடம உயிர்பிச்சை கேட்டதாகவும் அதிர்வுடன் சொல்கிறார் சுந்தர ராமசாமி. இந்த நூலின் கவித்துவம் மிக்க உச்ச தருணங்களில் ஒன்று இது. சுந்தர ராமசாமிக்கும் ஜெயமோகனுக...