2024 - செய்தவையும் தவறியவையும்

                                            

2024ம் வருடத்தில் இலக்கியம் சார்ந்து அடைய எண்ணுபவை என கீழ்கண்டவற்றை நண்பர்களின் குழுவில் பகிர்ந்திருந்தேன். இப்போது திரும்பிப் பார்க்கையில் பெருபாலும் எண்ணியவற்றை விட அடைந்தவை பல படிகள் கீழ் நிற்கின்றன என்று தெரிகிறது.

Here is what I am setting myself up to for the year. Hoping not to fall too short of this (I might have to play catch up in the last six months, but let's see)

Writing 10 Short Stories (Not able to comment on Poems, it kind of comes and goes)

நான்கு சிறுகதைகள் எழுதி முடித்திருக்கிறேன். இரண்டு சிறுகதைகளில் சில பத்திகள் மட்டும் எழுதி வைத்திருக்கிறேன். மனதில் கருவாக இருப்பவை மூன்று. எழுதியவற்றில் ஒன்றை சொல்வனம் இதழுக்கு அனுப்பினேன் அதனால் பதிவேற்றவில்லை, நிராகரிப்புக்கான வாய்ப்புகள் அதிகம். பதில் வந்த பிறகு பதிவேற்றுவேன் (கதையின் பெயர் 'ஐஸ்கிரீம்'). 

இரண்டு கவிதைகள் மட்டுமே பதிவேற்றியிருக்கிறேன். பதினைந்து கவிதைகளுக்கு ஒரு வரைவை எழுதி அப்படியே வைத்திருக்கிறேன், பதியவில்லை. இப்போது வாசித்துப் பார்க்கையில் அவற்றில் ஐந்து கவிதைகள் அவ்வளவு ஒன்றும் மோசமில்லை என்று தோன்றுகிறது.

Reading 36 Books (5 of them in English - at least two classics)

இருபத்தியோரு புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். பதினேழு புத்தகங்களை ஒலி வடிவில் கேட்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் ஐந்து புத்தகங்கள் வாசிப்பேன் என்று சொன்னதில் ஒன்று மட்டுமே சாத்தியமாகியது. இதில் செவ்வியல் புத்தங்கள் என்பதில் ஒன்று கூட வாசிக்கவில்லை. 

ஒலி வடிவில் கேட்பது வாசிப்பு கணக்கில் வருமா என்றால் இல்லை என்றே என்னுள் இருந்து பதில் வருகிறது. ஆகவே கணக்கு இருபத்து ஒன்று மட்டுமே. 

இலக்கிய வகைமை சாராது உடல் ஆரோக்கியம், நிதி மேலாண்மை என ஐந்து புத்தகங்களை கிண்டிலில் வாசித்தேன். அவற்றை இங்கு கணக்கில் கொண்டுவருவதில் விருப்பமில்லை.

5 Book Reviews (Could be any form of Literature)

ஆறு புத்தகங்களுக்கு வாசிப்பனுபவம் எழுதியிருக்கிறேன். 

Minimum 50 Blog Posts

பதிவுகள் இருபத்தியொன்று (மூன்று பதிவுகள் இன்னும் வரைவில் உள்ளன, பின்னர் பகிர்வேன்).

இந்த வருடம் பெரும்பாலான நேரம் மனம் இலக்கியத்தை விட்டு விலகியே இருந்தது. என்னுடைய மன அமைப்பிற்கு இது ஒன்று ஆச்சரியம் இல்லை, சிறு ஏமாற்றம் அவ்வளவே.

Comments

  1. சிறுகதையைப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை