குவளை - கவிதை

                                                 


ஆகஸ்ட் 18, 2024

வயதொத்தவர்களின்

இறப்புச் செய்தி

வந்தவண்ணமிருக்கிறது,

முற்றிலும் அருந்தப்படாத

மதுக்குவளையின்

சிதறல்

கனவுகளில் துரத்துகிறது,

இப்பொழுதெல்லாம்

சொட்டு மிச்சமில்லாமல்

அருந்திவிடுகிறேன்

பிரபஞ்சம் என்னிடம்

அளிக்கும்

மதுக்குவளைகளை,

காலியான குவளைகள்

பஞ்சுபோல

காற்றில் மிதப்பவை

என ஏனோ

கற்பிதம் கொண்டேன்,

பளிங்குக் கண்ணாடியும்

இறுகிய தரையும்

இரகசியமாய் சிரித்துக்கொண்டதை

அறியாமல்.

  - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை